ஜூன், 2016 க்கான தொகுப்பு

உலகளாவிய தொழில் முனைவோர் மாநாடு 2016இற்கு உறுதியான இலங்கை பிரதிநிதிகள் குழு செல்கின்றது

IMG_9765

ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 2016ஆம் ஆண்டு உலகளாவிய தொழில் முனைவோர் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு அமெரிக்கத் தூதரகத்தால் அனுசரணையளிக்கப்பட்ட யசிசூரி பிறைவேட் லிமிட்டட்டின் ஸ்தாபகர் இலங்கை வடிவமைப்பாளர் யசிசூரி கிரிபண்டாரவை அமெரிக்கத் தூதுவர் அதுல் கேப் சந்தித்தார்.

அடுத்த வாரம் ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 2016ஆம் ஆண்டு உலகளாவிய தொழில் முனைவோர் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு இலங்கையிலிருந்து நான்கு தொழில் முனைவோருடன் இணைந்து யசிசூரி பிறைவேட் லிமிட்டட்டின் ஸ்தாபகர் இலங்கை ஆடை வடிவமைப்பாளர் யசிசூரி கிரிபண்டாரவும் அமெரிக்கத் தூதரகத்தினால் அனுசரணையளிக்கப்படவுள்ளார். 

Continue reading

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்புத் தமிழகத்தில் 60வது அகவையை நோக்கி வெற்றி நடைபோடும் ‘வேர்ல்ட் பெஷன்’ ஜவுளிக்களஞ்சியம்

w-1

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாநகருக்கு வருகை தருவோர், கோட்டைமுனைப் பாலத்தை அடைந்ததும் அவர்களை முகமன் கூறி வரவேற்கும் ஓர் பிரபல்யமான கேந்திர வர்த்தக நிலையமாக அக்காலத்தில் திகழ்ந்த ஒரு வர்த்தக நிறுவனம், ‘பெஷன் ஹவுஸ்’ என்பதை அத்தனை இலகுவாக எவராலும் மறந்து விட முடியாது.

Ramzan-Nots-2016-New

1960களில் மட்டக்களப்புத் தமிழகத்தில் சுமாரான ஜவுளி நிலையமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனமானது, இன்று அரை நூற்றாண்டைத் தாண்டி 60வது அகவையை நோக்கி வீறு நடைபோட்டு வருவதுடன், தனது நீண்டகால ஜவுளி வர்த்தகத்துறையில் அடையப்பெற்ற ஆழமான அனுபவங்களினதும், விசுவாசமிக்க வாடிக்கையாளர்களினதும் பெறுபேறாக இன்று அதே மட்டக்களப்பு மாநகரில் ‘வேர்ல்ட் பெஷன்’ எனும் பெயரில் மூன்றடுக்குத் தளத்தையும், விசாலமான காட்சியறைகளையும் கொண்ட மாபெரும் ஜவுளிக் களஞ்சியமாக பரிணாமம் பெற்று விளங்குகின்றது.
Continue reading

இரண்டு காதி நீதிபதிகள் முன்னிலையில் ஒரே நாளில் தீர்க்கப்பட்ட பஸ்ஹு விவகாரத்து வழக்கு! -காத்தான்குடியில் சம்பவம்

CIG - Aliyaar HazrathQazi-Mahroof-Careem

 

 

 

காத்தான்குடி 04ம் குறிச்சி மத்திய வீதியைச் சேர்ந்த கலந்தர்லெப்பை பர்மிலா பானு என்பவரால் காத்தான்குடி 05ம் குறிச்சி, டாக்டர் அகமட் பரீத் மாவத்தையைச் சேர்ந்த அப்துல் சலாம் முஹம்மது சில்மி என்பவருக்கு எதிராக காத்தான்குடி காதி நீதிமன்றத்தில்; 01644/F எனும் இலக்கத்தில் பஸ்ஹு விவாகரத்து வழக்கொன்று வைக்கப்பட்டுள்ளது.

தனது கணவர் பாலியல் உறவு கொள்வதற்கு ஆண்மையற்றிருப்பதாகக் கூறியே தனக்கு பஸ்ஹு விவாக விடுதலை வேண்டும் எனக்கோரி வாதி, இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

எனினும் வழக்கு விசாரணையின்போது, தான் எந்தவிதமான ஆண்மைக் குறைபாடுகளும் அற்றவராக இருப்பதோடு, கடந்த 3 மாதங்களாக மனைவியுடன் உறவு கொள்வதற்குத் தான் முயற்சித்து அவரை அழைத்து வருவதாகவும், அவர்தான் அதற்கு இணங்கி தன்னுடன் உறவு கொள்ள வருவதாக இல்லை என்றும் கணவரான பிரதிவாதி காழி நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
Continue reading

புதிய தேர்தல் முறை தொடர்பில் NFGG நடாத்திய விசேட செயலமர்வு

IMG-20160610-WA0010

உத்தேசிக்கப்படும் புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது தொடர்பான விஷேட செயலமர்வொன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஏற்பாட்டில் கடந்த 8.6.2016  அன்று கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பு ஹார்ட்டி நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேர்தல் முறைகள் குறித்த சர்வதேச நிபுணரான கரே வோலன் அவர்கள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை முன்வைத்தார்.

Continue reading

இலங்கை – இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகங்கள் இணைந்து வழங்கும் இரா. உதயணன் இலக்கிய விருது – 2016

Viruthu

 

காணாமல் போனவர்களின் கதி அதோ கதிதானா? ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகமவின் முடிவு – துடிக்கும் மக்கள்!

dsc02854_25012016_kaa_cmy-720x480

யுத்தத்தினால் உறவுகளை இழந்துள்ள குடும்பங்களை உரிய முறையில் இனங்கண்டு, அவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்ட ஈட்டை ஒரே தடவையில் வழங்க வேண்டும் எனவும்; இது அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு எனவும் காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

paranagamaகாணாமல் போனவர்கள் குறித்த விசாரணை அமர்வுகள் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Continue reading

அநுர சேனாநாயக்கவிடம் மண்டியிடும் மஹிந்த! சிறைச்சாலையில் காத்திருக்கும் வழக்கறிஞர்கள்!!

625.256.560.350.160.300.053.800.461.160.90

தாஜூடீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நி்லையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது வழக்கறிஞர் ஊடாக, சேனநாயக்கவுக்கு தகவல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த தகவலில், அநுர சோநாயக்கவை பார்ப்பதற்கு தான் சிறைச்சாலைக்கு வந்தால் குற்றப் புலனாய்வு பிரிவினரின் குற்றச்சாட்டு மேலும் உறுதியாகும் வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் அவரை பார்ப்பதற்கு தான் வரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. Continue reading

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க வேண்டும்: இலங்கை மக்கள் கருத்து

160319112449_maithripala_sirisena_512x288_pmd_nocredit

மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சுலபமாக தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய அரசியல் சட்டமொன்றை உருவாக்குமாறு நாடு முழுவதும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக புதிய அரசியல் யாப்பு தொடர்ப்பாக மக்களின் கருத்துக்களை பதிவு செய்த விசேட குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அந்த குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜேநாயக்க இதனை தெரிவித்தார்.

தாங்கள் நாடு முழுவதும் சென்று புதிய அரசியல் யாப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்ப்பாக மக்களின் கருத்துக்களை பதிவு செய்ததாக கூறிய அவர், இந்த நிகழ்வின்போது தாங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார்.
Continue reading

இலங்கையிலும் அரச விடுமுறை தினங்கள் குறைப்பு! 2017ஆம் ஆண்டில் 24 நாட்கள் மட்டுமே லீவு!!

Sri-Lanka-2016-Holiday-Calendar

இலங்கையிலேயே வருடத்திற்கு அதிகமான விடுமுறை நாட்கள் விடப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயமே.!

இந்நிலையில் 2017ம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் வங்கி விடுமுறைத் தினங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு, புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், 2017ஆம் ஆண்டில் 24 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. Continue reading

மோட்டார் சைக்கிளில் ஒரு பக்கமாக இருந்து பயணிக்க கிளிநொச்சி பொலிஸார் தடை!

7598826-a-hand-drawn-illustration-of-an-indian-man-and-woman-travelling-on-a-motorbike-under-the-setting-sun-Stock-Vector

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் ஒரு பக்கமாக இருந்து பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணிக்கும் இரு பாலாரும் இரண்டு பக்கங்களும் கால்களை வைத்தவாறே பயணிக்க வேண்டும் எனவும், மோட்டார் சைக்கிளில் ஒரு பக்கமாக இருந்து பயணிப்பதால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கீழே விழுவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். Continue reading