ஜூன், 2016 க்கான தொகுப்பு

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காமல் முஸ்லிம்களின் ஆடம்பரப் பிரச்சினைகள் மீது முதலைக் கண்ணீர் வடிக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன்

imagesகடந்த வாரம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்தார். அமைச்சர் என்ற வகையில் அவரது அமைச்சுக்கு உட்பட்ட கடைகளை திறந்து வைத்ததுடன், அவரது கட்சியின் பல நிகழ்வுகளை இம்மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஏற்பாடு செய்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் காலத்திலிருந்தே இப்பிரதேசங்களில் சதோச நிறுவனம் திறக்கப்படுவதும், பின்பு சில மாதங்களில் அது காணமல் போவதும் வழக்கமாகும். அதுபோல் இன்று அமைச்சர் ரிசாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்ட சதோச நிறுவனம் எவ்வளவு காலங்களுக்கு நீடிக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். Continue reading

சந்தித்த இடத்தில் அரசியல் செய்பவர் கிழக்கு முதலமைச்சர் – பிரதியமைச்சர் அமீர் அலி

625.117.560.350.160.300.053.800.210.160.90சந்தித்த இடத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது நீண்ட தூரம் அரசியல் பிரயாணத்திற்கு உகந்ததாக தெரியவில்லை என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள செமட்ட செவண மாதிரிக் கிராம வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், Continue reading

புனித ரமலான்: நோன்புக் கஞ்சிக்காக 3000 பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு!

02-1464855001-jayalalitha745-21-600

புனித ரமலான் நோன்புக்காக தமிழ் நாட்டிலுள்ள மூவாயிரம் பள்ளிவாசல்களுக்கு 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உலக முஸ்லீம்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். இந்த ஆண்டு வரும் 6 அல்லது 7ம் தேதி ரமலான் நோன்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Continue reading

‘உதயன்’ பத்திரிகை மீதான வழக்கில் டக்ளஸ் தேவானந்தா சமூகமளிக்கவில்லை! மருத்துவச் சான்றிதழுடன் மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் பணிப்பு!!

downloaddownload (1)

‘உதயன்’ பத்திரிகை மீதான வழக்கில், அறிவித்தல் ஏதுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கடந்த மாதம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகி  இருக்கவில்லை.

இதன் காரணமாக வழக்குச் செலவைப் பெற்றுத் தருமாறு ‘உதயன்’ சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றில் கோரியுள்ளார்.

ஆனால், அவர் சுகவீனம் காரணமாகவே நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்று டக்ளஸ் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்ததால், அடுத்த தவணை மருத்துவ அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. Continue reading

தலைவர் நலமாக இருக்கிறார். இதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.

12718126_474215742766952_8535209817025986287_n

உலகில் உயிருடன் இருந்தும், இவர் இறந்து விட்டார் என தனது மரணச் செய்தியை அதிக முறை கேட்டவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டும் தான்..

1984 செப்டம்பர் 5 ல் இலங்கை இராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்திய, இலங்கை நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் மதுரையில் பழ. நெடுமாறன் அவர்களது வீட்டிற்கு தலைவர் வந்திருக்கிறார்.

1989 ஜூலை 25 – விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாத்தையா பிரபாகரனைச் சுட்டுக் கொன்று விட்டார். உடல் ஆனந்த பெரியகுளத்திற்கு அருகில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை அப்போதைய வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் உறுதிப்படுத்தினார்.

Continue reading

இலங்கை ராணுவத்திடம் கடைசி வரை பிரபாகரன் சிக்கவில்லை! பரபரப்பு தகவல்!

26-vellupillai-prabhakaran-300(மீள் பதிவு)

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.

அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது. Continue reading

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை அரசாங்கம் விசேடமாகக் கவனிக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர்

AHM Azwer(எம்.எஸ்.எம்.சாஹிர்)

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை விசேடமாகக் கவனிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில்,

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுள் ஊடகவியலாளர்களும் அடங்குவர்.  அவர்களின் புகைப்படக் கமெராக்கள் அனைத்தும்வெள்ளத்தில் அடிக்கப்பட்டு சென்றுவிட்டது. நாட்டில் நடக்கின்ற எல்லா விடயங்களையும் பற்றி எழுதுகின்ற, எழுதிய அவர்கள் இப்பொழுது நடு ரோட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஊடகவியலாளர்களை விசேடமாகக் கவனிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். Continue reading

இஸ்லாஹ் ஜும்ஆப்பள்ளிவாசலினால் திரட்டப்பட்ட பொருட்கள் அரச அதிபரிடம் கையளிப்பு

jamiul - islah (1)(சாய்ந்தமருது – எம்.எஸ்.எம்.சாஹிர்)

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் முகமாக சாய்ந்தமருது ஜாமிஉல்- இஸ்லாஹ் தௌஹீத்  ஜும்ஆப் பள்ளிவாசலினால் சாய்ந்தமருது பொதுமக்களிடம் இருந்து  திரட்டப்பட்ட 1 இலட்சத்து 35 ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் மற்றும் 1 இலட்சத்து 55  ஆயிரம்பெறுமதியான பணமும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம்  ஊடாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம். இனாமுல்லாஹ் மற்றும் ஜமாஅத்தின்  முக்கிய பிரமுகர் மௌலவி ஏ. கலீலுர்ரஹ்மான் ஆகியோர் கையளிப்பதையும் அருகில் பள்ளிவாசலின் அங்கத்தவர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம். Continue reading

புனித றம்ழான் மாதத்தில் இஷா மற்றும் தறாவீஹ் தொழுகை நேரங்கள்

CIG

“சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் நிகழ்த்துகின்ற மனிதர்களை உருவாக்க வேண்டும்” – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

IMG-20160601-WA0049

“நாம் பெற்றுக்கொள்ளும் கல்வி வெறும் தகமைகளை மாத்திரம் பெற்றுத்தருவதாக அல்லாமல் தன்னம்பிக்கையினையும் பெற்றுத் தருவதாக அமைய வேண்டும். அப்போதுதான் சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் நிகழ்த்துகின்ற மனிதர்களை  கல்வியின் மூலம் உருவாக்க முடியும்”  என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

ஜோர்டான் நட்டிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும்
கிண்ணியாவை சேர்ந்த முகம்மட் லாபீர்  அவர்களை கெளரவிப்பதற்கான நிகழ்வு கடந்த 28/05/2016 அன்று கின்னியாவில் நடைபெற்றது. SLMCயின் தலைவரும் அமைச்சருமாகிய ரவூப்ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது.. Continue reading