Archive for the ‘ ஆசிரியர் எழுத்து ’ Category

பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அடைகாத்த கூழ் முட்டை! NFGGயின் மகளிர் பிரிவு எல்லை தாண்டுகிறதா?

Group‘காத்தான்குடி ஆசிரியையால் முஸ்லிம்களின் இளவயது திருமணங்கள் மற்றும் விவாகரத்துக்கள் NGOக்களுக்கு விற்கப்படுகின்றனவா?’ எனும் தலைப்பில் எனது பிரதம உதவி ஆசிரியர் ஏ.எல். முகம்மது நியாஸ் கடந்த 20.07.2017ல் ஒரு சமூக விழிப்புணர்வு ஆக்கத்தை ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

அவரது இவ்வாக்கம் வெளியான மறுநாள் 21ம் திகதி காத்தான்குடியில் இயங்கிவரும் ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE) எனும் அமைப்பானது, குறித்த ஆக்கத்தில் ‘ஆங்கில மொழிப் புலமைவாய்ந்த ஆசிரியை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எமது அமைப்பின் உறுப்பினரான அனீஸா பிர்தௌஸ் ஆசிரியையா?’ எனக் கேள்வியெழுப்பி இருந்ததுடன், 22.07.2017 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தங்களுடன் கலந்துரையாட தமது அலுவலகத்திற்கு வருமாறு கேட்டு அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. Continue reading

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிடம் புவி. றஹ்மதுழ்ழாஹ் பகிரங்கக் கேள்வி!

IGP-pujitha

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களுக்கு,

இன்று (29.07.2016) வெள்ளிக்கிழமை காலை 09:00 மணிக்கு, எனது பத்திரிகையின் பிரதம உதவி ஆசிரியர் ஏ.எல். மொஹமட் நியாஸ் என்பவருக்கு எதிராக காத்தான்குடியிலுள்ள ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE) எனும் அமைப்பின் பணிப்பாளரும், NFGG எனப்படும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் பிரிவுத் தலைவியுமான திருமதி. அனீஸா பிர்தௌஸ் என்பவர் செய்திருந்த முறைப்பாடு ஒன்று தொடர்பாக காத்தான்குடி பொலீசாரின் அழைப்பிற்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு நானும், மொஹமட் நியாஸும் சென்றிருந்தோம்.

Kattankudy Police Station Chit

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி திரு. தியகல என்பவரிடம் பொலீசார் கையளித்திருந்த அழைப்புத் துண்டினை மொஹமட் நியாஸ் கொடுத்ததும், அவர் வெகுண்டெழுந்து ‘இதனை ஏன் நீ முகப்புத்தகத்தில் பதிவேற்றினாய்?’ என்று கேட்டார். Continue reading

சமூகப் பணியாளர் வசந்தராஜாவுக்கு த.தே.கூ. இடமளிக்காதது மட்டு. மாவட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகும்!

Mr.-T.Vasanthrajaபிரபல சமூக சேவையாளரும், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்புப் பிராந்தியக் கிளையின் தலைவருமான திரு. த. வசந்தராஜா அவர்களின் பெயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படாமையானது, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் – முஸ்லிம் – கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

திரு. வசந்தராஜா அவர்கள் தமது சிறுவயதிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு சத்தியாக்கிரக, உண்ணாவிரதப் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்குபற்றி வந்த வரலாற்றைக் கொண்டவர். Continue reading

இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள்: முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னமும் மௌனம் காப்பது ஏன்??

Interpol“இலங்கையில் கொழும்பு, காத்தான்குடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து தலிபான் தீவிரவாதிகள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்” என சர்வதேசப் பொலீசார் இலங்கையின் புலனாய்வுப் பிரிவினருக்கு எச்சரிக்கை அறிப்புச் செய்து ஒரு வாரம் கடந்து விட்டது.

Continue reading

ஆட்சியாளர்களிடம் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மரியாதை இழந்து போனது ஏன்?

 Rishad2-300x130கடந்த 19ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தென்னிலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட வன்முறை அநீதிகள் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் கருத்துக்களைத் தெரிவித்தபோது குறுக்கிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரது பேச்சை இடைநிறுத்துமாறு ஆவேசத்துடன் கூறியதும், அவரை ஒரு இனவாதி என பகிரங்கமாக விமர்சித்திருப்பதுமான செய்திகள் பரபரப்பாக வெளிந்திருந்தன.

Continue reading

பேருவளை அனர்த்தத்தில் அரசியல் ஆதாயம் தேடும் கி.மா. சபை முஸ்லிம் உறுப்பினர்கள்! சொந்த நிதி வழங்கி கண்ணீர் துடைத்து வரும் மண்ணின் மைந்தன்!!

EPCjameelSibyeyநேற்று (17.05.2014) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக் கூட்டத்தில் பேருவளை, அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் வெலிப்பன உள்ளிட்ட களுத்துறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற பொதுபலசேனா குண்டர்களின் வன்செல்கள் தொடர்பில் இலஙகை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தாம் ஒரு அவசர பிரேரணையை முன்வைத்ததாக ஸ்ரீ.ல.மு.கா. உறுப்பினரும், மு.காவின் குழத் தலைவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார்.
Continue reading

இலங்கையில் தலிபான் தீவிரவாதிகளா? சமூகப் பொறுப்புடன் மறுக்கின்றது ‘வார உரைகல்’!

interpol-logoThlibanஇலங்கையில் காத்தான்குடி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து தலிபான் தீவிரவாதிகள் சர்வதேச சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசக் காவல்துறையான ‘இன்டர்போல்’ எச்சரிக்கை விடுத்திருப்பதை காத்தான்குடி சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த சமூக ஊடகம் என்னும் வகையில் ‘வார உரைகல்’ முற்று முழுதாக நிராகரிக்கின்றது.

Continue reading

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்-தௌஹீத் அமைப்புக்கள் சந்திப்பு’ உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை தொடர்பாக ஒரு பதிலறிக்கை!!

Ithi130.05.2014 திகதியிடப்பட்ட ‘இத்திஹாது அஹ்லிஸ் ஸுன்னஹ்’ எனும் கடிதத் தலைப்புடன் 31.05.2014 சனிக்கிழமை இணையத்தளங்கள் பலவற்றிலும் ‘பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – தௌஹீத் அமைப்புக்கள் சந்திப்பு – உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

Continue reading

நீதிமன்றத்தில் கண்ணீர் மல்கியதை காத்தான்குடி.இன்போவும், ஸாஜில் நியூஸும் நிரூபிக்குமா?

Kattankudi.infoமட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில், முன்னாள் நகர சபைத் தவிசாளர் அல்ஹாஜ் மர்சூக்Zajil news அகமட்லெப்பை அவர்களிடம் நேற்றைய தினம் (22.05.2014) நான் பகிரங்கமாகவும், மானசீகமாகவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை, ‘கண்ணீர் மல்க’ மன்னிப்புக் கேட்டதாக காத்தான்குடி.இன்போ இணையத்தளம் இரண்டு தடவைகள் திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டது. அதேபோன்று ‘ஸாஜில் நியூஸ்’ இணையதளத்தின் SMS குறுஞ்செய்தியிலும் நான் ‘கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்ட’தாக செய்தி பரத்தப்பட்டது.
Continue reading

என்ன சொல்ல வருகின்றார் இந்த மௌலவி?

டந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஜும்ஆப் பள்ளிவாசலொன்றில் குத்பாப் பிரசங்கம் செய்த மௌலவி ஒருவர், அடுத்தவரின் குற்றங்களையும், குறைகளையும் அறிவதில் பொதுமக்கள் ஆர்வங்காட்டக் கூடாது என்றும், ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றங் குறைகளையிட்டு அலட்டிக் கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Continue reading