ஜூலை, 2015 க்கான தொகுப்பு

சமூகப் பணியாளர் வசந்தராஜாவுக்கு த.தே.கூ. இடமளிக்காதது மட்டு. மாவட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகும்!

Mr.-T.Vasanthrajaபிரபல சமூக சேவையாளரும், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்புப் பிராந்தியக் கிளையின் தலைவருமான திரு. த. வசந்தராஜா அவர்களின் பெயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படாமையானது, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் – முஸ்லிம் – கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

திரு. வசந்தராஜா அவர்கள் தமது சிறுவயதிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு சத்தியாக்கிரக, உண்ணாவிரதப் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்குபற்றி வந்த வரலாற்றைக் கொண்டவர். Continue reading

மாற்றத்துக்கு பின்னரான தடுமாற்றம்

Muslims_politico-மொஹமட் பாதுஷா

முன்னாள் ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை நோக்கி நடந்து வருவதற்கான தடைகளை அகற்றுவதன் மூலம், நல்லாட்சிக்கான மக்கள் போராட்டத்தை மீண்டும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு வழிவகுக்கின்றாரா? என்ற நியாயமான அச்சம் குறிப்பாக சிறுபான்மையினரை இன்றைய நாட்களில் வாட்டி வதைக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை சரித்திரத்தில் மிக மோசமான அரச தலைவர் அல்ல. என்றாலும் அவருடைய அதிகார தோரணையிலான அரசியலையும் இனவாதத்தை வளர விட்ட போக்கையும் மக்கள் பெரிதும் விரும்பவில்லை. இதனாலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நல்லாட்சி உருவாகிய பின்னர் மக்களுக்கு ஓர் ஆறுதல் கிடைத்தது. Continue reading

தேர்தல் வன்முறையாளர்களுக்கு வாக்களிப்பு முடியும் வரை பிணை கிடையாது!

ilanseliyan_001நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது. ஒழுக்கமில்லாத வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் சில வேளை வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படும் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். Continue reading