நவம்பர், 2014 க்கான தொகுப்பு

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொதுபல சேனாவின் முகவரா? -வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் கேள்வி

ASMINபிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொதுபல சேனாவின் ஏஜென்டா? என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம்கள் வரிந்து கட்டிக்கொண்டு வாக்களிப்பதன் மூலம் பொதுபல சேனாவிற்கு சாட்டையடி கொடுக்க வேண்டும்’ என்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கூற்று தொடர்பில் வினவப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்தபோது…, Continue reading

மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாத ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப் போவதில்லை: – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

Eng. Abdurrahumanஇக்கட்டான தருணங்களில் கூட நமது மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாத ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப் போவதில்லை என பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: Continue reading

மௌலவி ஸஹ்றான் மஸ்ஊதி அவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்

zaharanமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மௌலவி அல் ஹாபிழ் MCM. ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்களுக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாது.

காத்தான்குடி நகரில் தேசிய தௌஹீத் ஜமாஅத் எனும் ஏகத்துவப் பிரச்சார அமைப்பொன்றினை நிறுவி அதன் மூலமாக இந்த சமூகத்தில் வேர்விட்டுள்ள மார்க்க ரீதியான பல மௌட்டீக சித்தாந்தங்கள் மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதான முஸ்லிம்களின் தவறான புரிதல்கள் போன்ற விடயங்களை களையெடுப்பதில் நீங்கள் ஆற்றிவருகின்ற அறப்பணியானது மிகவும் இன்றியமையாததும் வரவேற்கத்தக்கதுமாகும். Continue reading

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள்?

indexmytஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க விரும்பினால் MR என்றும், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க விரும்பினால் MS என்றும் குறிப்பிட்டு 0777004774 என்ற ‘வார உரைகல்’ பத்திரகை அலுவலக தொலைபேசி இலக்கத்திற்கு இப்போதே SMS அனுப்புங்கள்.

ஒருவர் ஒரு முறை மாத்திரமே வாக்களிக்க முடியும்.

மங்கள சமரவீரவின் இரண்டாம் இன்னிங்க்ஸ் சக்ஸஸ்! பறிபோகிறது மேல் மாகாண சபை

Mangalhirunikkaமங்கள சமரவீரவின் இரண்டாம் இன்னிங்ஸ் அரசியல் அதிரடி ஆட்டம் சற்று முன்னர் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாக சர்வதேச இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

இதன் பிரகாரம் இன்னும் ஒரு வாரத்துக்குள் மேல் மாகாண சபை ஆளுங்கட்சியிடமிருந்து பறிபோகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Continue reading

உரைகல்லில் “வார உரைகல்”

-ஏ.எல். முஹம்மது நியாஸ் – பிரதம துணை ஆசிரியர், ‘வார உரைகல்’-

(காத்தான்குடி தாருல் அதர் அமைப்பின் முக்கிய செயற்குழு உறுப்பினரான சகோதரர் AB.. யாகூப் என்பவரும், அவரோடு இணைந்து இன்னும் சிலரும் ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ் மற்றும் பிரதம துணை ஆசிரியர் முஹம்மது நியாஸ் ஆகியோர் குறித்தும், இப்பத்திரிகையின் ஊடக செயற்பாடுகள் தொடர்பிலும் மின்னஞ்சல் வழியாக முன் வைத்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு பிரதம துணை ஆசிரியர் முஹம்மது நியாஸ் அவர்கள் சகோதரர் AB. யாகூப் அவர்களுக்கு எழுதிய காத்திரமான பதில் அறிக்கை)

???????????????????????????????Mohamed Niyas Zajil nதாருல் அதர் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் யாக்கூப் அவர்களின் முதலாவது மின்னஞ்சல் கடிதம்:

அஸ்ஸலாமு அலைக்கும்

நியாஸ்! நீங்கள் அத்வைதம் சம்மந்தமாகவும் இறை நிராகரிப்பு தொடர்பாகவும் தொடர்ச்சியாக உங்கள் பணியைச் செய்து வருகின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். அது போல் ஊரில் யார் நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் பாரபட்சமின்றி உங்கள் கருத்தைச் சொல்கின்றீர்கள். எந்த ஊடகம் தவறு செய்தாலும் அதைத் தோலுரிப்பது உங்கள் வழமை. Continue reading

காத்தான்குடி இன்போ செய்திக்கு மறுப்பும், அழிவுச் சத்தியத்துக்கு அழைப்பும்

Lafir-sirகடந்த 18.11.2014 அன்று www. kattankudi. info என்னும் இணையத் தளத்தில் ‘காத்தான்குடியில் ஷீஆ சலசலப்பும் பின்னணியில் அரசியல் பிரமுகர்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த செய்தி தொடர்பாக PMGG சூராசபை உறுப்பினர் MLM. லாபீர் ஆசிரியர் (காத்தான்குடி) அவர்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை)

இன்போவினால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட அறிக்கை:

கடந்த 13.11.2013 அன்று காத்தான்குடி.இன்போவில் ‘காத்தான்குடியில் ஷீயா சலசலப்பும் பின்னணியில் அரசியல் பிரமுகர்’ என்ற தலைப்பில் PMGGயின் சூறாசபை உறுப்பினர் MLM. லாபீர் ஆசிரியர் ஆகிய என் மீதும் PMGGயின் மீதும் அபாண்டங்களைச் சுமத்தி எனக்கும் PMGGக்கும் ஷீயா சாயம் பூசும் நோக்கத்திலான செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது. Continue reading

தாய் நாட்டின் எதிர்பார்ப்பு… மைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும்

mytபெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.

உள்ளூர் பள்ளிக்கூடமொன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில் விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார். Continue reading

“ஐயோ சிறிசேன” -சேறு பூசும் சுவரொட்டிகள் தயாராகின்றன! நாளைக்குள் ஒட்டப்படுமாம்!!

Mithripalaஐயோ சிறிசேன என்ற தலைப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சேறு பூசும் வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் செலவில் இந்த சுவரொட்டிகள் தற்போது கொழும்பில் அதிபாதுகாப்பு வலயமொன்றின் அருகாமையிலுள்ள அச்சகமொன்றில் அச்சிடப்படுகின்றது. Continue reading

களுத்துறையில் ஐ.தே.க. கொண்டாட்டம்! ஆளுங்கட்சி தலைமறைவு!!

unpppஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் களுத்துறையில் பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

களுத்துறை போதி மர சந்தி தொடக்கம் நகரம் வரை நிறைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தியும், ஜயவேவா கோசம் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். Continue reading