ஏப்ரல், 2014 க்கான தொகுப்பு

‘வார உரைகல்’ 300 ஆவது வரலாற்றுப் பதிவு வெளியீட்டு நிகழ்வுக்கான அன்பழைப்பு

Vaara-Uraikal-300(123)Invitation-300-1

BBS. எனப்படும் பொதுபலசேனாவின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான முன்னோடி நடவடிக்கை: புலம்பெயர் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான SLMDI UK அமைப்பின் பகிரங்க அழைப்பு

SLMDI-Logo-new-copy-1-300x219சுமார் முப்பது வருட காலமாக நமது ஸ்ரீலங்கா தாயகத்தில் நடைபெற்று வந்த கொடூர யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் நான்கின மக்களும் இன,மத,மொழி பேதங்களை மறந்து ஓர் தாய் பிள்ளைககளாக சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வருகின்ற வேளையில் இந்நாட்டிற்கும், இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் மற்றுமொரு சாபக்கேடாக பொதுபல சேனா, ஜாதிக ஹெல உறுமய, ராவண பலய என்னும் பெயர்களைக் கொண்ட சில பேரினவாத சக்திகள் முஸ்லிம்களையும், முஸ்லிம்களின் பொருளாதாரம், கலாச்சாரம், வணக்கஸ்தலங்கள், அடிப்படை மத வழிபாட்டு உரிமைகள் போன்றவற்றையும் பகிரங்கமாகவே அடக்கியொடுக்க முற்பட்டும், சூறையாடி வருவதும் இன்று உலகறிந்த விடயமாகும். Continue reading

அலியார் மௌலவிக்கு மாத்திரம் ஏன் இந்த அவலம்? அரசியல்வாதிகள் இஸ்லாத்திற்குப் புறம்பானவர்களா?

Batupitiya-Minhajiyya-Netமுஹம்மது நியாஸ்-

காத்தான்குடி ஜம்மியத்துல் உலமாவின் தலைவரும் காழி நீதிபதியுமான மதிப்புக்குரிய மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம். அலியார் (பலாஹி) அவர்கள் காத்தான்குடி ஜம்மியத்துல் உலமாவிற்கு இம்முறையும் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார் என்பது பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் நாம் அனைவரும் அறிந்த ஓர் விடயமாகும்.

மதிப்புக்குரிய மௌலவி அலியார் (பலாஹி) அவர்களைப் பொறுத்த வரையில் கடந்த காலங்களில் சூபிஸக் கொள்கை யில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருகின்ற, குறிப்பாக காத்தான்குடியில் இயங்கி வருகின்ற அப்துர் ரவூப் மௌலவி அவர்களுடைய கொள்கைத் தளமான பதுறியா ஜும்மாப் பள்ளிவாயிலுக்கும், பட்டுப்பிட்டியிலுள்ள அல்மத்ரஸதுல் மின் ஹாஜிய்யா அரபுக்கல்லூரி நிகழ்வுகளுக்கும் சென்று அங்கே நடைபெறுகின்ற நிகழ்வுகளில் மிகவும் பகிரங்கமாகவே முன் வரிசைகளில் அமர்ந்து கலந்து கொண்டதும் அந்நிகழ்வுகளில் உள்ளம் உருகி கண்ணீர் மல்க துஆக்கள் ஓதி நிகழ்ச்சிகளை சிறப்பித்ததும் காத்தான்குடி வாழ் மக்கள் யாவரும் அறிந்தவொரு விடயமாகும். Continue reading

இதோ..! ஹிஸ்புல்லாவின் மற்றொரு பொய் அம்பலமாகிறது!! ஜனாதிபதியின் கரங்களை மக்கள் பலப்படுத்தியுள்ளார்களாம்!!

Hizbullah-sogam00_mahindaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை, பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட தென் மாகாணத்தின் காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களிலுமுள்ள மொத்தம் 21 தேர்தல் தொகுதிகளிலும் பாரியளவில் இழக்கப்பட்டுள்ளது என்பது கடந்த 29ம் திகதி சனிக்கி ழமை நடைபெற்ற தென் மாகாண சபைக்கான தேர்தலின் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை இவ்வாறிருக்க நமது மண்ணின் மைந்தரும், பொருளாதார அபிவிருத்தி அரையமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழமையைப் போலவே தென்மாகாணத்தில் மக்கள் அரசாங்கத்திற்கு அமோக ஆதரவு வழங்கியிருப்பதாக அப்பட்டமான பொய்ச் செய்தியொன்றையே அவரது தேர்தல் அறிக்கையாக ஊடகங்களுக்குக் கொட்டியுள்ளார்.
Continue reading

ஊழல் மோசடிகளைக் கண்காணிக்கும் குழுவொன்றை நிறுவ பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா முன்வருவாரா?

Rahmaan-NetHiz---So-ஊடகவியலாளர் சந்திப்பில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் எதிர்பார்ப்பு-

பொதுச் சொத்துக்கள், பொது நிதிகளைக் கையாளும் விடயத்தில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களை சுயாதீனமாக விசாரித்து உண்மையைக் கண்டறியும் கண்காணிப்புக் குழு எனும் நல்ல நிறுவனம் ஒன்றிற்கான அத்திவாரத்தையும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நமது மண்ணில் ஆரம்பித்து வைத்து செயற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Continue reading

“முர்தத் பத்வா” விவகாரம் எவ்வாறு தீர்க்கப்பட்டது? உலமா சபையே தெளிவதாக பதிலளிக்க வேண்டும் என்கிறார் றகீப் மௌலவி

MIM. Rakeeb Moulaviகாத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை நீதியாகவும், நேர்மையாகவும், இறைவனுக்குப் பயந்தும் இஸ்லாமியக் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.

குறிப்பாக எமது மக்களின் ஈமானுடன் சம்பந்தப்பட்ட விடயமாகக் கருதப்படுகின்ற மௌலவி அப்துர் றவூப் அவர்களுக்கும், அவரது கருத்துக்களை ஏற்றவர்களுக்கும் வழங்கப்பட்ட ‘முர்தத்’ பத்வா எந்த அடிப்படையில் தீர்க்கப்பட்டது? என இன்று பரவலாகக் கேட்கப்பட்டு வரும் கேள்விக்கு உலமாக்கள் தெளிவான முறையில் பதிலளிக்க வேண்டுமென காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாசல் நம்பிக்கையாளரும், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முக்கியஸ்தருமான மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ. எம். றகீப் (பலாஹி) தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
Continue reading

சாஜில் இணையதள பிரதம ஆசிரியர் முஹம்மது நியாஸ் பதவியைத் துறந்தார்!

inexMohamed Niyas Zajil nசாஜில் நியூஸ் நெட்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். முஹம்மது நியாஸ், கடந்த மார்ச் மாதம் 29ம் திகதியிலிருந்து தனது பதவயை இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.