ஜனவரி, 2012 க்கான தொகுப்பு

‘வார உரைகல்’ ஆசிரியரை காசுக்கு வாங்க எவராலும் முடியாது! -சம்மேளனக் கூட்டத்தில் உறுப்பினர் தெரிவிப்பு!!

‘வார உரைகல்’ பத்திரிகை ஆசிரியரை விலை கொடுத்து எவராலும் ஒரு போதும் வாங்க முடியாதென காத்தான்குடி பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மே ளன உறுப்பினர் ஜனாப். எஸ்.ஏ. அப்துல் கபூர் தெரிவித்தார்.

கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையில் சம்மேளனத்தின் வாராந்தக் கூட்டம் வழமை போன்று நடைபெற்றது.

அங்கு ‘வார உரை கல்’ தொடர்பாக பலராலும் பிரஸ்தாபிக்கப்பட்ட வேளையிலேயே சம்மேளன உறுப்பினரான அப்துல் கபூர் மேற்கண்டவாறு ஆணித்தரமாகத் தெரிவித்ததாக சம்மேளன வட்டாரங்கள் தெரிவித்தன. Continue reading

இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட அனாச்சாரங்கள் எல்லாம் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் அரங்கேற்றம்!

காத்தான்குடி உலமாக்கள் கண்குளிரக் கண்டு மகிழ்ந்ததை அனாச்சாரங்களுக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளலாமா?

இவ்வருட தேசிய பாதுகாப்புத் தினம் தொடர் பாக கடந்த 26.12.2011ம் திகதி காத்தான்குடியில் நடை பெற்ற நிகழ்வுகளின்போது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான சமய, சமூக, கலாசார விழுமி யங்கள் புறக்கணிக்கப்பட்டதுடன், குழிதோண் டிப் புதைக்கப்பட்டதாகவும் பரவலாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது.

இதுவொரு தேசிய விழாவாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அதேவேளையில், இத்தகைய விழாக்கள் நடைபெறும் பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் தனித்துவமான சமய, சமூக, கலாச்சாரப் பண்பாடுகளையும் கவனத்திற்கெடுத்து அவற்றுக்கு மதிப்பளித்திருக்க வேண்டுமெனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. Continue reading

‘வரலாற்றில் ஒரு கேடு’! 6.5 Kg. போதைப் பொருள் கடத்திய சம்மாந்துறை மௌலவி சென்னை விமான நிலையத்தில் கைது!!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சென்னை விமான நிலையத்தினூடாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ நிறையுடைய போதைப் பொருளைக் கடத்திச் செல்ல முற்பட்டபோது இந்தியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். Continue reading

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கு எதிரான காத்தான்குடி சமூகத் தலைமைகளின் வழக்குகள்: சம்மேளனத் தலைவரும் பிலால் ஹாஜியாரும் பிரதம ஆசிரியருடன் சமாதானம்! சம்மேளனப் பிரதிச் செயலாளருக்கு பெப்.22ல் மறு தவணை! பொலீசாருக்கும் நீதிபதி அறிவுறுத்தல்!!

-ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் கடப்பாடுகளையும் வலியுறுத்தி நீதிபதி அப்துழ்ழாஹ் மன்றில் அறிவுரை-

‘வார உரைகல்’ பத்திரிகையில் தங்களைபபற்றி அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதாகக் கூறி காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ஐ. எம். சுபைர், அதன் பிரதிச் செயலாளர் ஏ.பி.எம் சாதிக்கீன் மற்றும் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸ லாம் நகர ஜும்ஆப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் கே.எம். கலீல் ஆகிய சமூகத் தலைவர்களால் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூலம் இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று தனித்தனி வழக்குகளில் இரண்டு வழக்குகள் கடந்த 18ம் திகதி புதன்கிழமை சமாதானமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் அன்றைய தினம் நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமாகி இவ்வழக்குகள் அழைக்கப்பட்ட போது பிரதிவாதியான பிரதம ஆசிரியர் மன்றில் ஆஜரானார். Continue reading

அப்துர்றவூப் மௌலவியின் அரசியல் ஞானம் நமதூருக்கு உதவுமா? – பகுதி: 2

மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில் அப்துர் றவூப் மௌலவி அவர்கள் ஆற்றிய உரை ஊரிலுள்ள சகல தரப்பினர் மத்தியிலும் பரவ லான வாதப் பிரதிவாதங்களைத் தோற்று வித்தது. எல்லா இடங்களிலும் அவரது மீலாத் விழா உரை பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த போதிலும் பாதகமான கருத்துடையவர்களே அதிகமாகக் காணப்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்ய துல் உலமா சபை, அப்துர்றவூப் மௌலவி அவர்களிடம் கடித மூலம் விளக்கத்தைக் கோரி இருந்தது. அதற்கான பதிலை அவரும் ஜம்இய் யதுல் உலமாசபைக்கு அனுப்பியிருந்தார். Continue reading

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் மாஹிர் ஹாஜியாருக்கு எதிராக ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடிப் பிரதேச செயலாளரும், கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் முன்னாள் தலைவருமான ஏ.எம். மாஹிர் ஹாஜியாருக்கு எதிராக ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (23.01.2012) திங்கட்கிழமை காலை முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். (முறைப்பாட்டு இலக்கம்: CIB -2  283/290

நேற்றைய தினம் (22.01.2012) காத்தான்குடி பொலிசாரின் வேண்டுகோளுக்கமைய பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அங்கு சமூகமளித்திருந்த பொதுமக்கள் முன்னிலையில் தனக்குள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பகிரங்கமாக அச்சுறுத்தி எச்சரிக்கை செய்ததாக பிரதம ஆசிரியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Continue reading

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடி இணைப்புச் செயலாளர் பிரதம ஆசிரியருக்கு பகிரங்க எச்சரிக்கை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடி பிரதேசத்திற்கான செயலாளர் மாஹிர் ஹாஜியார் ‘வார உரைகல்‘ பிரதம ஆசிரியரை பொலிசாரின் முன்னிலையிலேயே பலமாக அச்சுறுத்தி பகிரங்கமாக எச்சரித்தார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.45 மணிக்கு இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றது. இதுபற்றிய விவரமாவது:

Continue reading

காத்தான்குடி முகைதீன் தைக்காவினுள் மீண்டும் மதத் தீவிரவாதிகள் வெறியாட்டம்!

புனித அல்குர்ஆன் பிரதிகளை பாதுகாப்புக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்!
பள்ளிவாயலின் கண்ணியத்தையும் பாழடித்தனர்!
‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரையும் தாக்கினர்!!

காத்தான்குடி ஊர் வீதியிலுள்ள முகைதீன் தைக்காப் பள்ளிவாசலில் இன்று காலையில் மீண்டும் மதத்தீவிரவாதிகள் உட்புகுந்து தமது வன்முறை ஆக்கிரமிப்பு வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைப் பள்ளிவாசலில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேற்றிவிடக் கூடாது என்பதற்காக புனித குர்ஆன் பிரதிகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு தாங்கள் குர்ஆன் ஓதுகிறோம் எனப் பாசாங்கு காட்டினர். Continue reading

சம்மேளனத் தலைவர் சுபைர் சீசீ அவர்களின் தலைமையில் காத்தான்குடியில் மீண்டும் ஷாதுலிய்யா தரீக்கா ஹழ்றா மஜ்லிஸ் நேற்று ஆரம்பம்.

-இம்மண்ணில் வாழும் எல்லோரும் அவர்களின் மத அனுஸ்டானங்களைச் சுதந்திரமாகத் தொடரலாம் என மண்ணின் மைந்தன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் அறிவிப்பு-

இஸ்லாமிய உலகின் பழம்பெரும் தரீக்காவான ஷாதுலியா தரீக்காவின் சிறப்புக்குரிய ஹழறா மஸ்லிஸ் (றாதீப் மற்றும் திக்ர் செயற்பாடுகள்) சுமார் ஒருமாத கால இடைவெளிக்குப் பின்னர் நேற்று 14ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஸாவியா வீதியிலுள்ள ஸாவியா தைக்காவில் அதிவிமரிசையாக நடைபெற்றதாக ‘வார உரைகல்’லுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடிப் பிரதேசத்தில் ஊர் வீதியிலுள்ள முகைதீன் தைக்கா பள்ளிவாசலில் காதிரிய்யா மற்றும் றிபாயிய்யா தரீக்காக்களின் ஷெய்ஹுமார்களான கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்), ஸெய்யித் அஹமத் கபீர் ரிபாயீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) ஆகியோரால் கோர்வை செய்யப்பட்ட றாத்தீப் மற்றும் திக்ர் மஜ்லிஸ்கள் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருவதைப் போன்று இப்பள்ளிவாசலிலும் ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் ஸெய்யித் அபுல்ஹஸன் அலிய்யுனிஷ்ஷாதுலி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களினால் கோர்வை செய்யப்பட்ட ஷாதுலிய்யா றாத்தீப் திக்ர் மஜ்லிஸ் பன்னெடுங்காலமாகவே வாராந்தம் நடைபெற்று வந்தது. Continue reading

மட்டு. புளியம்போக்கர் தர்ஹாவில் நடைபெற்ற றிபாய் றாத்தீப் நிகழ்வு

மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் நொச்சிமுனை தமிழ்க் கிராமத்தில் மீன்பாடும் வாவியோரம் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த புளியம்போக்கர் வலியுழ்ழாஹ் தர்ஹாவில் விஷேட றிபாய் றாத்தீப் மஜ்லிஸ் வைபவம் ஒன்று நேற்று 13.01.2012 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நபி (ஸல்)அவர்களின் குடும்ப வழித்தோன்றலில் காதிரிய்யா வர்ரிபாயிய்யா தரீக்காக்களின் 09வது தலைமுறை ஷெய்ஹு நாயகமாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அந்துரூதீவைச் சேர்ந்த ஷெய்ஹு நாயகம் சங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் முகம்மது புகாரீ .. நல்ல கோயாத் தங்கள் மௌலானா அவர்களின் தலைமையில் இச்சிறப்பு றாத்தீப் நிகழ்ச்சி நடந்தேறியது. Continue reading