ஜனவரி 13th, 2012 க்கான தொகுப்பு

பொலீஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் சேவைகளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உயர்வாகக் கருதுகின்றது

-பொலீஸாரின் பிள்ளைகளுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வில் டாக்டர். ILM. றிபாஸ்-

தமது உயிரையும் மதியாது சேவையாற்றும் பொலிசாரினதும் பாதுகாப்புத் தரப்பினரினதும் சேவையை நாம் உன்னதமான அரச பணியாக மதிக்கின்றோம் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரின் 8000 மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங் களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் மற்று மொரு நிகழ்வு கடந்த 08ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொறுப்பதிகாரி திரு. அமரசிங்ஹ அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொலிஸ் உத்தியோ கத்தர்களின் பிள்ளைகளுக்கான அப்பியாசப் புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கருத் துத் தெரிவித்த டாக்டர். றிபாஸ் அவர்கள் மேலும் அங்கு கூறியதாவது: Continue reading

‘கிறிஸ்டல் பெலஸ்’ தங்கு விடுதிக்கு பெயர்ப்பதிவு செய்வதில் காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் மோசடி செய்தாரா?

காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு முன் னால் அமைந்துள்ள தனியார் ஆடம்பரத் தங்கு விடுதியை ‘கிறிஸ்டல் பெலஸ்’ என வியாபா ரப் பெயர்ப்பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த விவகாரத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக செயலக வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

குறித்த ஆடம்பரத் தங்கு விடுதி, மக்கள் குடி யிருப்பு நிறைந்த நகருக்கு மத்தியில் இயங்கி வருவதாகவும், இதன் மொட்டை மாடியில் நட மாடுவோரால் அயலிலுள்ள தனது குடியிருப்பில் தான் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளா குவதாகவும், எனவே இத்தங்கு விடுதிக்கு அனு மதிப்பத்திரம் வழங்கக் கூடாதெனவும் காத்தான் குடி பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், இலங்கை மனித உரிமை கள் ஆணைக்குழு அதிகாரிகள் ஆகியோருக்கு அயல்வீட்டுக் குடியிருப்பாளரான எஸ்.ஏ. பேபி முரீதா என்பவர் முறையீடு செய்திருந்த விடயம் வாசகர்கள் அறிந்ததே. Continue reading

காத்தான்குடியில் மதத் தீவிரவாதிகளின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பம்! முகைதீன் தைக்காவில் நடைபெறவிருந்த வாராந்த ராத்தீப் நிகழ்ச்சிக்கு இடையூறு!! பொலீஸாரின் வேண்டுகோளுக்கமைய தைக்காவுக்கு நேற்றிரவு பூட்டு!!

காத்தான்குடியில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளின் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று 12.01.2012 வியாழக்கிழமை இரவு பத்து மணிக்கு காத்தான்குடி ஊர் வீதியில் அமைந்துள்ள முகைதீன் தைக்காவில் வழமையாக நடைபெற்றுவரும் காதிரிய்யா றாத்தீப் நிகழ்வை நடாத்த விடாமல் காத்தான்குடியிலுள்ள மதத் தீவிரவாதிகள் குழுவொன்று இடையூறு செய்து குழப்பம் விளைவித்ததாக காத்தான்குடி லஜ்னதுல் காதிரிய்யஹ் வர்றிபாயிய்யஹ் தரீக்கா சபையினர் ‘வார உரைகல்’லிடம் தெரிவித்தனர். இதுபற்றி அத்தரீக்கா சபையினர் மேலும் தெரிவித்ததாவது:

மேற்படி தரீக்காவின் சங்கைக்குரிய ஷெய்ஹு நாயகம் அஸ்ஸெய்யிதுஷ்  ஷேஹ் முஹம்மது புகாரி PPSS நல்ல கோயாத் தங்கள் மௌலானா அவர்களின் தலைமையில் இந்த றாத்தீப் மஜ்லிஸ் பிரதி வியாழக்கிழமை இரவுகள் தோறும் தைக்காவின் வழமையான நிகழ்ச்சிகள் மற்றும் தொழுகை போன்ற வணக்கங்கள் யாவும் முடிவடைந்த பின்னர் தரீக்கா சபையைச் சேர்ந்த சூபி முஸ்லிம்களினால் நடைபெற்று வருவது வழக்கமாகும். Continue reading

ஆளுநர் அலவி மௌலானாவின் அறிக்கை சமூகத்தின் குரல்! ஹிஸ்புல்லாவும் சம்மேளனமும் தெரிவித்திருப்பது பெய்யறிக்கையே!!

‘கிழக்கு முஸ்லிம் ஆயுதக் குழுக்களால சூபி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் மேல்மாகாண ஆளுநர் அஸ்ஸெய் யித் அலவி மௌலானா அவர்கள் விடுத்த அறிக்கையும், அதற்கெதிராக ‘கிழக்கில் ஆயு தக் குழுக்கள் கிடையாது. ஆதாரமற்ற அறிக்கைகளை விட வேண்டாம்’ என்ற தலைப்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா விடுத்த மறுப்பறிக்கையும் கடந்த மாதம் 25ம் திகதி வெளிவந்த ‘நவமணி’ தேசிய வார இதழில் முன்பக்கத்தின் பிரதான செய்திகளாகப் பிரசுர மாகி இருந்தன.

கடந்த 01ம் திகதி வெளிவந்த ‘நவமணி’ இதழில், ‘முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக் கும் நோக்கில் அலவி மௌலானா அறிக் கை விடவில்லை’ என்ற தலைப்பில் காத்தான் குடி காதிரிய்யா தரீக்கா அமைப்பின் அறிக்கை யும், அதற்கெதிராக ‘ஆளுநர் அலவியின் அறிக்கை ஆதாரம் எதுவும் அற்றது’ என்ற தலைப்பில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அறிக்கையும் பிரசுரமாகி இருந்தன. Continue reading

அப்துர் றவூப் மௌலவியின் அரசியல் ஞானம் நமதூருக்கு உதவுமா? பகுதி: 01

புகழ் அனைத்தும் அழ்ழாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!!

காத்தான்குடியின் அன்றைய – இன்றைய அரசியல் கள நிலவரங்களைத் தொட்டுச் செல் லும் இத்தொடரில் மதிப்புக்குரிய மௌலவி அல்ஹாஜ் அப்துர் றவூப் (மி;ஸ்பாஹி) அவர் களின் தலைமையிலான அரசியல் நடவடிக்கை களானது எவ்வாறு தோற்றம் பெற்றன? அவை இப்போது என்ன நிலைமையில் இருக்கின்றது? எதிர்காலத்தில் அவரது அரசியல் செயற்பாடு கள் எந்தளவுக்கு எமதூருக்கு உபயோகப்படும் என்பதைப் பற்றியே இத்தொடரில் ‘வார உரை கல்’ வாசகப் பெருமக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் எவராலும் மறக்கப்பட முடியாத ஒரு தேர்தலா கும். முன்னாள் கல்வியமைச்சர் மர்ஹும் அல் ஹாஜ் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் ஸ்ரீ.ல.சு.கட்சியில் போட்டியிட, அவரை எதிர்த்து மர்ஹும் டாக்டர் அல்ஹாஜ் அகமத்பரீத் மீரா லெப்பை அவர்கள் ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட தேர்தல் அதுவாகும். Continue reading

வெள்ள நிவாரண நிதி கோரிய கள்ளக் கையெழுத்து மோசடி விவகாரம்: பிரதேச செயலாளருக்கும் தொடர்பு? பி.எம்.ஜீ.ஜீக்கு சந்தேகம்! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் மோசடி ஆவணங்கள் கையளிப்பு!!

புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளி வாசலின் தலைவரான அல்ஹாஜ் எம்.எல்.எம். மஹ்றூப், காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் தமது பள்ளிவாசல் மஹல்லாவாசிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கியதாகக் கூறி 1200 ஜமாஅத்தார்களின் போலியான கையெழுத்துக் களை இட்டு மோசடியாக சுமார் 12 இலட்சம் ரூபா வரையிலான அரச பணத்தை அபகரிக்க முயற்சித்தமைக்கு எதிராக உடனடியாகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபை உறுப்பினர்கள் பிரதேச செயலாளர் ஜனாப். எஸ்.எச்.எம். முஸம்மிலுக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

கடந்த மாதம் 30ம் திகதி காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், ஏ.ஜீ.எம். ஹாறூன் ஆகிய இருவரும் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:   Continue reading