Archive for the ‘ கௌரவம் ’ Category

பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். தௌபீக், சம்மேளனத்தின் புதிய தலைவராக தெரிவு

Alhaj-AMM.-Thoufeek-Eng.

பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். தௌபீக்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய தவைராக காத்தான்குடி 05, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவரும், பொறியியலாளருமான அல்ஹாஜ் ஏ.எம்.எம். தௌபீக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (29.05.2016 ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயலில் நடைபெற்ற சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டத்திலேயே இவர் சம்மேளன யாப்பிற்கமைய தெரிவு செய்யப்பட்டார்.

பொறியாலாளர் அப்துர் ரஹ்மானுக்கு கல்விச் சேவைக்கான சர்வதேச விருது!

BCAS Award (3)கல்வித்துறையில் ஆற்றிவரும் சிறப்பு மிக்க சேவைக்கான சர்வதேச விருதொன்று பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆர்யபத்தா நிறுவனத்தினால் (Aryabhatta Organisation) கடந்த 18.05.2016 அன்று இந்தியாவில் நடாத்தப்பட்ட வருடாந்த விருது வழங்கும் விழாவின்போதே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

Continue reading

கிழ‌க்கு முத‌ல்வ‌ர் த‌ன்னை ப‌கிர‌ங்க‌மாக‌ அவ‌மான‌ப்ப‌டுத்திய‌ க‌ட‌ற்ப‌டை அதிகாரியையும் ஆளுன‌ரையும் அதே மேடையில் வைத்து க‌ண்டித்த‌மையை உல‌மா க‌ட்சி பாராட்டுகிற‌து.

downloadmubarak-moulavi-e1330839878465அண்மைய‌ கிழ‌க்கு முத‌ல்வ‌ர் ப‌கிர‌ங்க‌ மேடையில் ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌ம் ப‌ற்றிய‌ கேள்விக்கு உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி மேலும் தெரிவித்த‌தாவ‌து:
உண்மையில் கிழ‌க்க மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் என்ப‌வ‌ர் ம‌க்க‌ளால் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர். ஆனால் ஆளுன‌ரோ க‌ட‌ற்ப‌டை தள‌ப‌தியோ ம‌க்க‌ளால் தெரிவு பெற்ற‌வ‌ர்க‌ள் அல்ல‌. மாறாக‌ அர‌சாங்க‌த்தால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ ஊழிய‌ர்க‌ள்.
ஒரு ஜ‌ன‌நாய‌க நாட்டில் அர‌ச‌ ஊழிய‌ரை விட‌ ம‌க்க‌ள் பிர‌திநிதிக்கே அதிக‌ க‌வுர‌வ‌ம் உண்டு. இத‌னால்தான் பாராளும‌ன்ற‌த்தில் கூட‌ அத‌ன் பிர‌திநிதிக‌ளுக்கு இந்த‌ நாட்டில் யாருக்கும் இல்லாத‌   த‌னி க‌வுர‌வ‌ம் உண்டு.

Continue reading

பாதணி வர்த்தகரின் மகள் முதலிடம்! பத்திரிகை ஆசிரியரின் மகன் இரண்டாமிடம்!!

FazeehaZinthahதற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, கணிதப் பிரிவில் 3 A சித்திகளைப் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவி வெள்ளத்தம்பி ஐனுல் பஸீஹா, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 19வது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதேபோல் கணிதப் பிரிவில் 3 A சித்திகளைப் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் றஹ்மதுல்லாஹ் ஸிந்தாஹ் நவாஸ் இம்மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 52வது இடத்தையும் பெற்றுள்ளார். Continue reading

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர்மீது சம்மேளனப் பிரதிச் செயலாளர் சாதிக்கீன் மேற்கொண்ட ‘புதுமைத் தாக்குதல்’

-‘இந்தப் படிக்கட்டிலும் கால் வைக்கக்கூடாது பறையா..! உன்னை செருப்பால் அடிப்பேன்டா.. நாயே..!-

கடந்த 11ம் திகதி வியாழக்கிழமை இரவு இவ்வாரத்திற்கான 192வது ‘வார உரைகல்’ பத்திரிகையை விநியோகிப்பதற்காகச் சென்றிருந்த பிரதம ஆசிரியர் புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வைப் பாhத்து ‘ படிக்கட்டில் கால் வைக்கக்கூடாது பறையா! நாயே.. உன்னைச் செருப்பால அடிப்பேன்டா..!’ என்று ஆவேசமாக எச்சரித்தார் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிச் செயலாளரும், காத்தான்குடியில் இடம்பெறும் புனித குத்பாப் பிரசங்கங்களை ‘காத்தான்குடி இன்போ’ எனும் இணையதளத்திற்கு வாராந்தம் தொகுத்து வழங்கி வருபவருமான ஜனாப். ஏ.எம். சாதிகீன் அவர்கள்.

முன்னதாக, அன்றைய தினம் மஃரிப் தொழுகையின் பின், காத்தான்குடி பிரதான வீதியில் மத்திய பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள ர்ழவ ரூ ஊயகé’ என்ற வர்த்தக நிலையத்திற்கு பிரதம ஆசிரியர் வழமைபோல் இவ்வாரப் பத்திரிகையை வழங்கச் சென்றபோது அங்கே அவரின் வியாபாரப் பங்காளரும், காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மீரா பள்ளிவாசலின் நம்பிக்கையாளருமான ஜனாப் றஹ்மதுழ்ழாஹ் அவர்கள், சிகரட் ஒன்றைப் புகைத்தவாறு உள்ளே காணப்பட்டார்.

பிரதம ஆசிரியரை அவர் கண்டதும், ‘சென்ற வாரம் எமக்குப் பத்திரிகை தரவில்லையே..?’ எனக் கேட்டார். Continue reading

டாக்டர் றிபாஸ் அவர்களுக்கு IFCEC கௌரவம்

மருத்துவ முகாமைத்துவப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வாரம் காத்தான்குடி IFCEC இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தினரால் இக்ரஃ அலுவலக கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.

அதன்போது நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கழகத்தின் அமீர் சகோதரர் MSM. நுஸைர், விடிவெள்ளி ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த சகோதரர் MBM. பைரூஸ், ஜனாப்ALM. ஹஸீன், காத்தான்குடி நகரசபையின் எதிர்ககட்சித் தலைவரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாஜ் MM. அப்துர் றஹ்மான் ஆகியோர் உரையாற்றுவதையும்,

பிஸ்மி குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் நளீமி அவர்களின் முன்னிலையில் வித்தியாகிர்த்தி MM. அமீர்அலி ஆசிரியர் அவர்கள் டாக்டர் ILM. றிபாஸ் அவர்களுக்கு கௌரவ நினைவுச் சின்னம் வழங்குவதையும் மேலேயுள்ள படங்களில் காணலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடம்

The Ceylon Chamber of Commerce  இன் National Agribusiness Council இனால் நடாத்தப்பட்ட 2010ம் ஆண்டிற்கான AG – BIZ 2010 கண்காட்சிக்கு இணைவாக நடைபெறும் விவசாயப் பெருமக்களுக்கு மகுடம் சூட்டும் மாபெரும் நிகழ்வு கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப.3.00மணிக்கு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விவசாய விருதின் 2010க்கான முதலாம் இடத்தினை எமது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் ஷரீப் பெற்றுக் கொண்டார்.

இதற்கான சான்றிதழையும், விஷேட விருதிணையும் விவசாய பிரதி அமைச்சர் கௌரவ J. புஷ்பகுமார அவர்கள் வழங்கி வைத்தார்.

காத்தான்குடி பாலமுனை கிராமத்தில் பொறியியலாளர் MM. பளுலுல் ஹக் அவர்களின் முழுமையான பங்களிப்புடனும் ஆலோசனைகளுடனும் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘றையான் (F)பார்ம்’ செயற் திட்டத்திற் கூடாகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இச்செயற் திட்டத்தின் பிரதான இயக்குனர்களாக சகோதரர் ஷரீப், சகோதரர் றிபாய்தீன்ஆகியோர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘வார உரைகல்’ பத்திரிகையின் 150வது வார வெற்றிச் சிறப்பிதழ் வெளியீடு

அன்பினிய ‘வார உரைகல்’ இணையதள வாசகர்களே!

‘வார உரைகல்’ பத்திரிகையின் 150வது வார வெற்றிச் சிறப்பிதழ் நேற்று 12ம் திகதி வியாழக்கிழமை மாலை காத்தான்குடியில் வெளியிடப்பட்டு உள்ளுர் வாசகர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இவ்வெளியீடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற வாழ்த்துச் செய்திகளை முதலில் இணையதள வாசகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். – பிரதம ஆசிரியன் Continue reading

காத்தான்குடி வைத்திய சாலைத் திறப்புவிழா நிகழ்வு ஒரு வரலாற்றுப் பதிவு!

சுனாமியால் பாதிக்கப்பட்டு முற்றாக அழிவடைந்த எமது காத்தான்குடி வைத்தியசாலையை பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கி நவீனமயப்படுத்தி முற்றிலும் புதிதாகக் கட்டியெழுப்ப அயராது முயற்சித்த, ஒத்துழைத்த, பங்களிப்புச் செய்த, அனுமதியளித்த…

 சுகாதார அமைச்சு, நோர்வே நாட்டு மக்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளை, இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிப் பிரிவு, நமது மாகாண, மாவட்ட, பிரதேச அரசியல் பிரமுகர்கள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், நகர சபை, கிழக்கு மகாண சுகாதார அமைச்சு, சுகாதாரத் திணைக்களம் உள்ளிட்ட யாவருக்கும் ‘வார உரைகல்’ வாசகர்கள் சார்பாகவும், காத்தான்குடி நகர மக்கள் சார்பாகவும் எமது மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2010.07.14ம் திகதி 675 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதியை வைபவ ரீதியாகத் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்காகக் கையளித்திட வருகைதரவுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க தேசிய அதியுயர் சபையின் கௌரவ நிர்வாகிகளையும், மட்டக்களப்பு மாவட்ட கிளை நிருவாகிகளையும், காத்தான்குடிப் பிரிவின் நிர்வாகிகளையும் மற்றும்…

கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்ட, காத்தான்குடி நகர அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், கனவான்கள் அனைவரையும் வாஞ்சையுடன் நாமும் வரவேற்கின்றோம்.

நோர்வே நாட்டு மக்களுடைய நிதிப் பங்களிப்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் அழகுற அமைத்துத் தரப்பட்டுள்ள இவ்வைத்தியசாலையை பொறுப்புடன் நாம் என்றென்றும் பாதுகாப்போம்!

நாமும் நமது சந்ததிகளும் இவ்வைத்தியசாலையின் மூலம் நோயற்ற வாழ்வினைப் பெற்று வாழ வேண்டுமென அன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் மனதாரப் பிரார்த்திப்போம்!!

-இது, ‘வார உரைகல்’ வாசகர் குடும்பத்தினால் வெளியிடப்படும் ஒரு வரலாற்றுப் பதிவாகும்-

மௌலவி அப்துர்றவூப் மிஸ்பாஹி கௌரவிக்கப்பட்டார்

ajr00181அகில இனநல்லுறவு ஒன்றியம் கடந்த 20ம் திகதி சனிக்கிழமை இரத்தினபுரி நகர மண்டபத்தில் தேசிய ரீதியில் நடாத்திய தனது 14வது வருட பாராட்டு விழாவின்போது காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த அறிஞர்களில் ஒருவரான ‘ஷம்சுல் உலமா – காதிமுல் கவ்மி’ மௌலவி அல்ஹாஜ் ஏ. அப்துர்றவூப் (மிஸ்பாஹி – பஹ்ஜி) அவர்களுக்கும் ‘டாக்டர். சாமஸ்ரீ ஜௌஹருல் அமல்’ என்னும் சிறப்புப் பட்டமளித்து கௌரவித்தது. அமைச்சர் கௌரவ பிரேம்லால் ஜயசேகர அவர்களால் இச்சிறப்புப் பட்டம் அன்னாருக்கு கையளிக்கப்பட்டது. (படமும் தகவலும்: எம்.ஐ. அஜ்மீர் நவாஸ்)