மே, 2012 க்கான தொகுப்பு

‘வார உரைகல்’ – பதிவு: 230 திகதி: 28.05.2012 திங்கட்கிழமை ஒரே பார்வையில் பிரசுரமான செய்திகள்:

மோசடியும், பொய்யும் நிறைந்த சம்மேளனத்தின் புதிய தலைமையை ஏற்க முடியாதென பொதுச்சபை உறுப்பினர் நிராகரிப்பு!

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய தலைமைத்துவப் பொறுப்பு அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவர் எமதூர் சகோதரர்கள் அரசாங்கத்திடம் கையளிப்பதற்காக வழங்கியிருந்த தேசிய பாதுகாப்பு நிதியை மோசடி செய்தவராகவும், என்மீது அபாண்டமான பொய்யொன்றை பகிரங்கமாகக் கூறியவராகவும் இருக்கின்றார். எனவே மோசடியும், பொய்யும் நிறைந்த அவரது தலைமைத்துவத்தினை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தெரிவித்தார்.

சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டம் நேற்று 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணிக்கு முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலின் மேல்மாடியில் நடைபெற்றது. Continue reading

‘வார உரைகல்’ – பதிவு: 229 திகதி: 25.05.2012 வெள்ளிக்கிழமை ஒரே பார்வையில் பிரசுரமான செய்திகள்:

சம்மேளனத் தலைமையில் மாற்றம்! தலைமைக்கேற்ற மாற்றம் மர்சூக் அஹமட் லெப்பைக்கும் வேண்டும்!!

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் 2012ஃ2013ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 27ம் திகதி ஞாயிறு காலை 08:30 மணிக்கு முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் மேல்மாடியில் நடைபெறவுள்ளது.

இப்பொதுச்சபைக் கூட்டத்தில் சம்மேளனத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பு முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு சம்மேளன யாப்பின்படி வழங்கப்படவுள்ளது.இதனடிப்படையில் அப்பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவராகவுள்ள முன்னாள் நகர பிதா அல்ஹாஜ் மர்சூக் அகமட் லெப்பை அவர்கள் சம்மேளனத்தின் தலைவராவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Continue reading

ஆதாரமில்லாமல் சம்மேளனக் குப்பை வசூல் குளறுபடியைச் சுட்டிக்காட்டவில்லை.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு எப்போதும் வக்காலத்து வாங்கும் காத்தான்குடி இன்போ இணையதளத்தில், நகரசபையின் திண்மக்கழிவகற்றும் காணிக் கொள்வனவுக்காக சம்மேளனமும் ஜம்இய்யதுல்உலமாவும் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய பணத்திற்கான கணக்கறிக்கை விபரம் வசூல் நடவடிக்கையில் ஈடுபட்ட பள்ளிவாசல்களின் பெயர் ரீதியாக கடந்த 15ம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

இக்கணக்கறிக்கையை உன்னிப்பாக அவதானித்த ‘வார உரைகல்’ அதில் குறிப்பிடப்பட்ட 25 பள்ளிவாசல்களாலும் திரட்டிய பணத்தொகையைக் கூட்டிப்பார்த்தபோது 86,000 ரூபா அதிக வரவாகக் காணப்பட்டது. Continue reading

‘வார உரைகல்’ – பதிவு: 228 திகதி: 21.05.2012 திங்கட்கிழமை ஒரே பார்வையில் பிரசுரமான செய்திகள்:

சம்மேளனம் சமர்ப்பித்த குப்பை வசூல் கணக்கில் குளறுபடி!
கூடுதல் தொகை 86,000 ரூபா எவ்வாறு வந்தது?
அடையாளப்படுத்தப்பட்ட காணி ‘பொருத்தமான காணியாக ஏன் மாற்றம் பெற்றது?

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் திண்மக்கழிவகற்றும் நடவடிக்கைக்காக அடையாளப்படுத்தப்பட்ட காணியொன்றைக் கொள்வனவு செய்யவென சென்ற மாhச் மாதம் 17ம் திகதி காத்தான்குடி பள்ளிவாசல்கள் மஹல்லா ரீதியாகக் குடும்பத்திற்கு தலா 500 ரூபா வீதம் வசூலித்த நிதி அறவீடு தொடர்பாக கடந்த 15ம் திகதி (சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்) கணக்கறிக்கையை வெளியிட்டுள்ளது. Continue reading

பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களை சம்மேளனம் குறைத்து மதிப்பிடுகிறதா? பிரதியமைச்சரும், வலயக் கல்விப் பணிப்பாளரும் சமமா?

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அரசியல் செல்வாக்கை இப்பிரதேசத்தில் வளர்க்கும் பிரதான முகவர் நிலையமாகச் செயற்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டை அதன் மற்றுமொரு செயற்பாடும் தற்போது துல்லியமாக நிரூபித்திருப்பதாக சமூக ஆர்வலர்களால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை விரைவில் அதன் வருடாந்த சாதனையாளர் விழாவினை நடாத்தத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதை அனைவரும் அறிவோம். Continue reading

ஜமாஅத்தார் சங்க வேட்பாளர் முஹ்ஸின் ஆசிரியர் வீட்டின் மீது கல்வீச்சு

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிம்பிக்கையாளர் சபைத் தெரிவுக்காக அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கத்தின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ஜனாப். ஏ.எம். முஹ்ஸின் (வேட்பாளர் இலக்கம்: 34) ஆசிரியரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Continue reading

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நவவியும் செயற்பட்டதாகக் குற்றச்சாட்டு!

முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாக சபைத் தெரிவு மீண்டும் குழப்பத்தில் முடிவு!!

ஜமாஅத்தார் சங்கம் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கப் போவதாகவும் அறிவிப்பு!!!

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திpணைக்களத்தினால் இன்று 18ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டவாறு நடைபெறவில்லை. இன்றும் குழப்பமே முடிவாக அமைந்தது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதேச சுகாதாரப் பணிப்பாளரிடம் ஏற்கனவே இரகசியமாகத் தெரிவித்திருந்தவாறே தேர்தலை நடாத்த வந்த மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நவவி அவர்களும், அதிகாரிகளும் வாக்கெடுப்புக்கு என ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் வேட்பாளர்களுடனும், ஜமாஅத்தார்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி காலத்தைக் கடத்தியதன் மூலம் வாக்கெடுப்பு நடைபெறாமல் தமது கடமையைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. Continue reading

‘வார உரைகல்’ பதிவு: 227 திகதி: 18.05.2012 வெள்ளிக்கிழமை. ஒரே பார்வையில் வெளிவந்த செய்திகள்:

நகரசபையின் குப்பை விவகாரம்: தீர்வு காண தேசிய ரீதியாகவும் பாரிய வசூல்

காத்தான்குடி நகரசபையின் திண்மக் கழிவகற்றும் திட்டத்திற்கான நிதி வசூல் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலும் இடம்பெறுகிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் 17ல் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சகல வீடுகளிலும் குடும்பத்திற்கு தலா 500 ரூபா வீதம் இதற்காகப் பணம் வசூலிக்கப்பட்டது. Continue reading

‘வார உரைகல்’ பதிவு: 226 திகதி: 14.05.2012 திங்கட்கிழமை. வெளிவந்த செய்திகள் ஒரே பார்வையில்:

வீதிக்கடத்தல் நடவடிக்கைக்கு ஜனாதிபதியே வழிகாட்டியாம்!
நகரசபை, சம்மேளனம் மௌனம்!! பொதுமக்கள் விசனம்!!!

ஊருக்குப் பெயர் மாற்றும் யோசனையைக் கைவிட்டு விட்டு, ஊரிலுள்ள வீதிகளுக்குப் பெயர் மாற்றுகின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும், சகபாடிகளான கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முபீன் மற்றும் பரீத் ஆகியோரும் தற்போது பாரம்பரியமான பெயர்களைக் கொண்ட காத்தான்குடியின் வீதிகளை வேறு இடங்களுக்கு கடத்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி மக்கள் ‘வார உரைகல்’லிடம் விசனம் தெரிவிக்கின்றனர். Continue reading

விஷேட செய்தி: காத்தான்குடி குப்பை விவகாரம் தேசிய முக்கியத்துவம் பெறுகின்றது!

காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் சேருகின்ற திண்மக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் திக்குமுக்காடி வரும் சர்வாதிகாரத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையிலான நகரசபை ஆளுந்தரப்பு நிர்வாகம், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமாவின் அனுசரணையோடு நகரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள திண்மக்கழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அடையாளப்படுத்தப்பட்ட காணியொன்றை பூநொச்சிமுனைப் பகுதியில் வாங்கவுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவித்து ஊரிலுள்ள குடும்பங்களிடம் தலா 500 ரூபா வீதம் பணம் அறவிட்டிருந்தது. Continue reading