மே, 2012 க்கான தொகுப்பு

‘வார உரைகல்’ பதிவு: 224 திகதி: 07.05.2012 திங்கட்கிழமை. ஒரே பார்வையில் வெளியான செய்திகள்:

சம்மேளன நிர்வாகமும், ஜம்இய்யதுல் உலமாவும் பொதுமக்களை ஏமாற்றிவிட்டது!

பொதுமக்கள் குடியிருப்புப் பிரதேசமான புதிய காத்தான்குடி கிழக்கு 167டீ கிராம உத்தியோகத்தர் பிரிவில் திண்மக்கழிவுகற்றும் திட்டத்திற்கான காணிக் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டிருப்பது குறித்து இப்பகுதிப் பொதுமக்கள், பிரமுகர்கள் பலரும் விசனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி நகரசபையின் இத்திட்டத்திற்காக காணியொன்றை தெரிவுசெய்து அடையாளப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருந்ததுடன் குறித்த அக்காணியைக் கொள்வனவு செய்வதற்கே பொதுமக்களிடமிருந்து குடும்பத்திற்கு தலா 500 ரூபா வீதம் நிதியுதவி அளிக்குமாறும்  உத்தியோகபூர்வமாகக் கேட்டிருந்தது. Continue reading

‘வார உரைகல்’ பதிவு: 225 திகதி: 11.05.2012 வெள்ளிக்கிழமை. வெளிவந்த செய்திகள்:

ஏ.எல்.எஸ். மாவத்தைக் காணிக் கொள்வனவு விவகாரம்:
ஜம்இய்யதுல் உலமாமீது தீர்மானம் திணிக்கப்பட்டதாம்!

காத்தான்குடி நகரசபையின் திண்மக்கழி வகற்றும் திட்டத்திற்காக பூநொச்சிமுனையில் அடையாளப்படுத்தி 60 இலட்சம் ரூபா விலையும் மதிப்பிட்டிருந்த காணியை வாங்குவதற்காக பொதுமக்களிடமிருந்து 500 ரூபா வீதம் பணம் அறவிட்ட காத்தான்குடி சம்மேளனமும், ஜம்இய்யதுல் உலமாவும் அவ்வாறு பணம் அறவிட்டதன் பின் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டு ஏ.எல்.எஸ் மாவத்தையில் 50 சதுர அடி நீள அகலமும் கொண்ட 13 காணிகளை 36 இலட்சம் ரூபாவுக்கு வாங்கிய ஏமாற்றுச் செயல் குறித்து 224ம் ‘வார உரைகல்’ செய்தி வெளியிட்டிருந்தது. Continue reading