ஜூலை, 2012 க்கான தொகுப்பு

கி.மா. தேர்தலில் அப்துர் றவூப் மௌலவி தரப்பின் ஆதரவு சிப்லிக்கா? ஆஸாத் சாலிக்கா??

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான பொறியியலாளர் எம்.எப்.எம். சிப்லி அவர்களுக்கு அப்துர் றவூப் மௌலவி தரப்பினர் ஆதரவு வழங்குவார்களா? என்பதில் சந்தேகம் நிலவுவதாக அறியப்படுகின்றது.

அண்மையில் இத்தேர்தல் தொடர்பாக பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். ஜெஸீம் ஒரு கலந்துரையாடலை அப்துர் றவூப் மௌலவி தரப்பு ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதன்போது கருத்துத் தெரிவித்த ஆதரவாளர்கள் பலரும் இம்முறை தேர்தலில் யாருக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கதைகளைத் தங்களிடம் இனியும் கதைக்க வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Continue reading

காத்தான்குடி பிரதேச செயலகச் சுற்றுச் சூழல் கவனிப்பாரற்ற நிலையில்.

காத்தான்குடி பிரதேச செயலகச் சுற்றாடல் கவனிப்பாரற்ற நிலைக்குள்ளாகி இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச செயலகத்தின் பெயர்ப்பலகை மிக மோசமான நிலையில் இருந்ததை ‘வார உரைகல்’ அண்மையில் சுட்டிக்காட்டி இருந்ததையடுத்து அது புதுப்பிக்கப்பட்டது. எனினும் அப்புதிய பெயர்ப்பலகையை பிரதேச செயலக அதிகாரிகள் உறுதியாக நிறுவி இருக்காத காரணத்தால் தற்போது அது வீதியில் சரிந்து விழக்கூடிய அபாய நிலைக்குள்ளாகி காணப்படுகின்றது. Continue reading

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் மீதான கொலை அச்சுறுத்தல் முறைப்பாடு மீண்டும் பொலிஸ் நடவடிக்கைக்காக கையளிப்பு

‘வார உரைகல் பிரதம ஆசிரியர் கொல்லப்பட வேண்டிய நபர்’ என்று காத்தான்குடி பிரமுகர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்திருந்த மட்டக்களப்பு வர்த்தகர் அல்ஹாஜ் கே.எம். கலீல் (பிலால் ஹாஜியார்) என்பவருக்கு எதிராக பிரதம ஆசிரியர் செய்திருந்த முறைப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த மத்தியஸ்த சபை விசாரணைகள் முடிவுற்று தீர்த்து வைக்கப்படாமைக்கான சான்றிதழ் முறைப்பாட்டாளருக்கு கடந்த 22ம் திகதி வழங்கப்பட்டது. Continue reading

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பின் மற்றொரு அதிகார அடாவடித்தனம்: றிஸ்வி நகர் அல் – இக்பால் வித்தியாலயத்த கபளீகரம் செய்ய முயற்சியாம்! பா.அ.சங்கம் பொலிஸில் புகார்!! வேட்பாளர் சிப்லி தலையிட்டுத் தீர்வு காண்பாரா?

புதிய காத்தான்குடி றிஸ்வி நகரில் அமைந்துள்ள அல்இக்பால் வித்தியாலயத்தை இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையமாக மாற்றுவதற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினர் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருவதாக அப்பாடசாலையின் பா.அ.சங்க நிர்வாகிகளும், பெற்றோர் நலன் விரும்பிகளும் ‘வார உரைகல்’லிடம் தெரிவித்துள்ளனர். Continue reading

ஆளுந்தரப்புக்குள் விருப்பு வாக்குகளைப் பெறுவதில் மாத்திரமன்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதிலும் கடும் போட்டி

 

 

 

 

 

 

 

 

ஆளும் ஐ.ம.சு. கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் காலங்களில் விருப்பு வாக்குகளைப் பெறுவதில் மாத்திரமன்றி மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளைச் செய்வதிலும் போட்டி நிலைமைகள் வலுப்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. Continue reading

செய்தித் தலைப்புக்கள் பற்றி ஸ்ரீமான் மகாஜனம்

எமது இணையதளப் பார்வையாளர்களுக்காக இன்று தொடக்கம் நாளாந்த செய்தித் தாள்களிலும், இலத்திரணியல் ஊடகங்களிலும் வெளியாகும் செய்தித் தலைப்புக்களையும், அதுதொடர்பாக ஸ்ரீமான் பொதுமக்களின் கருத்துக்களையும் நாம் தொகுத்துத் தரவுள்ளேம்.

இத்தலைப்புக்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பான இணையதள வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படும். உங்கள் கருத்துக்களை எமது vaarauraikal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

28.07.2012 சுடரொளி மற்றும் வீரகேசரி நாளிதழ்களில் வெளிவந்த செய்தித் தலைப்புக்கள்:

செய்தி: எதிரணியின் 15க்கும் மேற்பட்டோர் தேர்தலுக்கு முன் அரசுடன் இணைவு – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு

ஸ்ரீமான் மகாஜனம்: ஆளுந்தரப்பிலிருந்து வெளியால வந்து எலக்ஷன் கேக்கிற ஸ்ரீ.ல.மு.காவில் இருந்து தெரிவாகப்போற கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தேர்தலுக்குப் பிறகு உங்களுடன் வந்து சேருவினமாக்கும்..? Continue reading

மஞ்சந்தொடுவாய் குடிநீர் குழாய்பதிப்பு நடவடிக்கை: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அரசியல் வங்குரோத்தையும், அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் அப்பட்டமாக்கியுள்ளது! -மட்டு. மாநகர உறுப்பினர் அன்ஸார் காட்டம்-

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்கு நாளைய தினமே உத்தியோகபூர்வமாக குடிநீர் விநியோகத்திற்கான குழாய்களைப் பதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ஜனாப் எம்.கே. றம்ழான் (அன்ஸார்) ‘வார உரைகல்’லுக்கு இன்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையே இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், நாளை 28ம் திகதி சனிக்கிழமை காலை 09:00 மணிக்கு மாநகர மேயர் ஸ்ரீமதி. சிவகீர்த்தா பிரபாகரன் அவர்களால் இந்த குழாய்களைப் பதிப்பிக்கும் வேலைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். Continue reading

காத்தான்குடியில் மீண்டும் ‘பிரிஸ்டல்’ குளிர்பானம்!

காத்தான்குடியில் 22 வருட இடைவெளியின் பின் மீண்டும் பிரபல்யமான ‘பிரிஸ்டல்’ குளிர்பானத் தயாரிப்பாளரான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். சஹாப்தீன் தமது ‘பிரிஸ்டல் கூல் ஸ்பொட்’ வர்த்தகத்தை ஆரம்பித்துள்ளார்.

காத்தான்குடி குட்வின் சந்தியில் இவரது குளிர்பான நிலையம் மிகவும் பிரசித்தி பெற்றதாக முன்னர் திகழ்ந்தது. பின்னர் இவர் தனது குடும்பத்தோடு திருகோணமலை நிலாவெளிப் பிரதேசத்திற்குச் சென்று குடியேறி அங்கு 22 வருடங்களாக குளிர்பான விற்பனையில் ஈடுபட்டிருந்தார். Continue reading

காத்தான்குடி பிரதேச செயலக முஸ்லிம் பெண் உத்தியோகத்தரை தமிழ் அலுவலகப் பணியாளர் தூஷித்து தாக்க முனைந்தாராம்!

-பிரதேச செயலாளரிடமும் பொலிஸ் நிலையத்திலும் புகார்! பெண்ணுரிமை பேசும் அரசியல்வாதிகள் கவனத்திற் கொள்வார்களா?

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பொது முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி வரும் ஐ.எல். எஸ். ஜாஹிதா என்னும் முஸ்லிம் பெண் உத்தியோகத்தரை அங்கு கடமையாற்றும் பி. சுரேந்திரராஜா என்ற தமிழ் அலுவலகப் பணியாளர் ஒருவர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் முன்னிலையிலேயே தகாத வார்த்தைகளால் தூஷித்து அவரைத் தாக்கவும் முற்பட்டதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம். முஸம்மிலிடமும், காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ‘வார உரைகல்‘லுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Continue reading

‘சிந்தித்துச் செயற்படுவோம்! மக்களுக்கு விசுவாசமான அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவோம்’

-நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

இன்று வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம்-

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரமொன்றை இன்று (27.07.2012) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்காகச் சமூகமளித்த பொதுமக்களுக்கு காத்தான்குடியிலும், அதையடுத்துள்ள முஸ்லிம் கிராமங்களிலும் விநியோகித்தது.

‘சிந்தித்துச் செயற்படுவோம்! மக்களுக்கு விசுவாசமான அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே..! அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னுமொரு தேர்தல் களத்தை நாம் வந்தடைந்திருக்கின்றோம். இதுபோலவே தேர்தல் காலங்கள் பலவற்றை கடந்த காலங்களிலும் கடந்து வந்திருக்கின்றோம். இவற்றின் போதெல்லாம் எமது வாக்குகளைக் கோரி நின்ற அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் எமக்காகவே குரல் கொடுக்கப் போவதாக முழங்கினார்கள். சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்து விடிவைப் பெற்றுத் தருவோம் என்றும் சொன்னார்கள். அது ஒரு மாபெரும் அரசியல் போராட்டமென்றும் அவர்களுக்கு வாக்களிப்பது மார்க்கக் கடமையென்றும் கூறி மக்களின் உணர்வுகளைக் கவனமாகத் தூண்டியும் விட்டார்கள்.

Continue reading