Archive for the ‘ பகிரங்கக் கடிதங்கள் ’ Category

“வார உரைகல்” பிரதம ஆசிரியருக்கு பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் அவர்கள் எழுதிய பகிரங்கக்கடிதம்

Eng. Abdurrahumanஅன்புடன் வார உரைகல் ஆசிரியர் அவர்களுக்கு.

உங்களது பத்திரிகையான தொடர்ச்சியாக வாசிக்கின்றவர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் அதில் வெளிவரும் செய்திகள் ஆக்கங்கள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாக எனது சில முக்கிய அவதானங்களை தங்களுடன் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். Continue reading

பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடிக்கு திறந்த மடல்!

Gopala Kirishnagandthiபிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடி அவர்களுக்கு வணக்கம்!images

உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை நான் சொல்வது மிகவும் உளப்பூர்வமாகத்தான். இப்படிச் சொல்வது ஒன்றும் எனக்கு அவ்வளவு எளிதான செயலல்ல.

ஏனெனில், நீங்கள் இப்போது அடைந்திருக்கும் உச்சபட்ச பதவியில் உங்களைக் காண விரும்பியவர்களில் ஒருவனல்ல நான். நீங்கள் பிரதமராகியிருப்பது குறித்துக் கோடிக்கணக்கானோர் பரவசத்துடன் இருக்கும் அதேவேளையில், இன்னும் கோடிக்கணக்கானோர் இதே காரணத்துக்காக வருத்தமுற்றிருக்கக் கூடும் என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். Continue reading

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கைக்கு ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் பதில்

EDitor-PuviAbdur Rauff MisbahiEx-4

 

 

 

 

 

‘வட்டிக்குப் பணமெடுத்து வாகனம் வாங்குவதற்கு காத்தான்குடி உலமாக்கள் அங்கீகாரம்’ என்ற ‘வார உரைகல’ பத்திரிகையின் செய்தி தொடர்பாக கடந்த 10ம் திகதி காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கை உப்புச்சப்பில்லாத ஒரு மழுப்பல் அறிக்கையேயாகும். Continue reading

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கைக்கு ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் பதில்

vaaraurai_heading‘வட்டிக்குப் பணமெடுத்து வாகனம் வாங்குவதற்கு காத்தான்குடி உலமாக்கள் அங்கீகாரம்’ என்ற ‘வார உரைகல’ பத்திரிகையின் செய்தி தொடர்பாக கடந்த 10ம் திகதி காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கை உப்புச்சப்பில்லாத ஒரு மழுப்பல் அறிக்கையேயாகும்.

கடந்த மாதம் 27ம் திகதி நடைபெற்ற காத்தான்குடி நகர சபையின் 42வது அமர்வில் 9% வட்டிக்கு கடனாகக் கிடைக்கும் பணத்தை எடுத்து JCB பெக்கோ இயந்திரம் ஒன்றை வாங்குவது தொடர்பில் சபை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்த சர்வாதிகாரமுள்ள தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், அவ்வாறு கிடைக்கும் பணத்தைப் பெற்று வாகனம் வாங்கலாம் என்பதற்கு பல தரப்பு உலமாக்களும் எனக்கு பத்வா வழங்கியுள்ளார்கள் என்று மிகத் தெளிவாகவே கூறியிருப்பதனை அந்த ஒலிப்பதிவைச் செவியேற்ற காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையினரும் அவர்களால் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர். Continue reading

காத்தான்குடி இன்போவின் கீழ்த்தரமான ஊடகச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன்

காத்தான்குடியைச் சேர்ந்த சில கேடுகெட்ட இளைஞர்களால் முகவரி இல்லாத மறைவிடத்தில் ஒளிந்திருந்து கொண்டு நடாத்தப்பட்டு வருகின்ற காத்தான்குடி.இன்போ எனும் இணையதளத்தில், கடந்த 20ம் திகதியன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினருடன் நானும் இணைந்து கொண்டு காத்தான்குடி பிரதான வீதி வர்த்தகர்களுக்கு எமது இயக்கத்தினால் மறுநாள் ஏற்பாடு செய்யப்படவிருந்த இப்தார் நிகழ்வுக்கான அழைப்புக்களை விநியோகித்து வந்த புகைப்படம் ஒன்றைப் பிரசுரித்து அதற்கான வாசகர் கருத்துக்களைக் கோரி இருந்தது.

Continue reading

அந்நியரை அன்றாடம் அண்டிப் பிழைத்து வாழும் காத்தான்குடி இன்போ ஊடகக் குப்பாடிகளுக்கு…

கடந்த 08ம் திகதி காத்தான்குடி இன்போ இணையதளத்தில் வெளியான ‘முஸ்லிம் ஊடகவியலாளர்களை இலக்கு வைக்கும்  தமிழ் ஊடகப் பயங்கரவாதம்’ என்ற சுய அறிக்கைத் தொடரில்….

‘…இவ்வாறான இந்த நாசகார நடவடிக்கையை முன்னெடுப்பதில் காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும் வாரப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரின் உதவியையும் இந்த தமிழ் இனவாதி கள் பெற்றிருப்பதும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.’

‘தனது சமூகத்தை போட்டுக் கொடுக்கும் கையாலாகாத்தனத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் இக்குறிப்பிட்ட வாரப் பத்திரிகை ஆசிரிய ரும், இவர் சார்ந்தவர்களும் இனவாதிகளின் கைக்கூலிகளாக இருந்து தங்களது சமூகத் தையே சில்லறைத்தனமான சுயலாபங்களுக் காக  சதிகாரர்களுக்கு அடகு வைக்கும்போது, இந்த இனவாதிகளின் பணக் கட்டுகளுக்கு பின்னால் இருந்துதான் இவர்கள் இவ்வாறான சதிகளில் ஈடுபடுகின்றார்களோ என்று எல்லோ ரையும் சிந்திக்க வைக்கின்றது.’

‘இந்த வாரப்பத்திரிகை ஆசிரியரை தனது கொள்கை பரப்புரைகளுக்கு பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட அரசியல் இயக்கமும் இந்த சதி முயற்சிகளின் பின்னால் இருந்து செயற்பட்டு வருவதாக சந்தேகம் வெளியிடப்படுகின்றமை இங்கு குறிப்பிடதக்கதாகும்’ எனக் குறிப்பிட்டுள் ளனர்.

அதுதொடர்பில் காத்தான்குடியைத் தளமாகக் கொண்டியங்கும் வாரப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரான நான் இப்பைத்தியக்கார இணைய தளத்திற்கும், அதற்குக் கைதட்டும் சித்தம் கலங்கிய கொமன்ட்ஸ் கோமாளிகளுக்கும் தெரிவிப்பதாவது: Continue reading

தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்குமாறு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் குழு கோரிக்கை

“VAARAURAIKAL” Vol: 171 -11.02.2011- Page: 08

காத்தான்குடிப் பிரதேச ஸ்ரீ.ல.மு.கா. அதிருப்தியாளர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ். யூ.எல்.எம்.என். முபீன் அவர்களிடம் நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு கடிதம் கடிதம் மூலம் கேட்டுள்ளனர்.

ஸ்ரீ.ல.மு.கா. அதிருப்தியாளர்கள் சார்பாக குழுவின் தலைவர் ஜனாப் எஸ்.எச்.ஏ. கபூர் செயலாளர் ஜனாப் பி.எம். அலி அக்பர் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  Continue reading

சமகால நடைமுறை மாற்றத்திற்கான எதிர்பார்ப்பே “புதிய நாளை”யின் ஆசிரியர் தலையங்கமாகும்

“VAARAURAIKAL” Vol: 169 Date: 28.01.2011 Page: 04

இம்மாதம் (2011 ஜனவரி) வெளியான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ அச்சு ஊடகமான ‘புதிய நாளை’யில் வெளியான ஆசிரியர் தலையங்கம் குறித்து காத்தான்குடி இன்போ இணையதளத்தில் ‘அபூஹாதீ’ என்பவரால் தெரிவிக்கப்பட்டிருந்த விமர்சனத்திற்கு பதிலாக இணையதள வாசகர் எம். அப்துல் கப்பார் என்பவர் எழுதியனுப்பிய பதில் கருத்து மடலை அவ்விணையதளத்தினர் பிரசுரிக்காது இருட்டடிப்புச் செய்ததன் காரணமாக அவ்வாசகரின் வேண்டுகோளுக்கிணங்க ‘வார உரைகல்’ அதனை இங்கு பிரசுரிக்கின்றது. -பிரதம ஆசிரியர்-

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இம்மாதம் வெளியிட்ட ‘புதிய நாளை’யின் 14வது இதழில் பிரசுரமான ‘நடுநிலையா? அல்லது நயவஞ்சகத்தனமா?’ என்னும் தலைப்பிலான ஆசிரியர் தலையங்கம் தொடர்பாக காத்தான்குடி இன்போ இணையதள வாசகர் அபூஹாதீ அவர்கள் எழுதியிருந்த கருத்து மடலை கண்ணுற்று அதுபற்றிய எனது கருத்துக்கள் சிலதையும் தங்களது இணையதளத்தில் பதிப்பிக்க விரும்பி இம்மடலை எழுதுகின்றேன்.

அபூஹாதி அவர்கள் தனது கருத்து மடலின் தொடக்கத்திலேயே, ‘ஒவ்வொரு சாராரும் சமூகத்தில் தேர்ந்தெடுத்துள்ள பணியினையே செய்து வருகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளதற்கமைய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் நமது காத்தான்குடித் தாயக மண்ணைத் தளமாகக் கொண்டு சமூகம், கல்வி, அரசியல் தொடர்பான நற்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் சமூகம், கல்வி மற்றும் அரசியல் பணிகளை முன்னெடுத்து வருவதால் ஏனைய சுகாதாரம், ஆன்மீகம், விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளில் எல்லாம் கவனம் செலுத்துகிறார்கள் இல்லை என்றும் சொல்ல முடியாது.

தேவைக்கேற்ப அத்துறை களிலும் அவ்வப்போது அவர்கள் கவனம் செலுத்தியே வருகிறார்கள் என்பதை கடந்த ஆறாண்டு காலத்தில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித் தொடர்களைத் தொடராகக் கவனித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெளிவாகும்.

கடந்த ஆறாண்டு காலத்திற்கு முன்னர் இவ்வியக்கம் தோற்றம் பெற்றதற்கான முக்கிய காரணம், நமதூரின் உட்கட்டமைப்பு நிர்வாகங்களில் மலிந்து காணப்பட்ட நிர்வாகச் சீர்கேடுகளும், ஊழல் மோசடி நடவடிக்கைகளுமேயாகும். Continue reading

‘எனது ஹராமான பணத்தைத் தந்துவிட்டு புலனாய்வு விசாரணைக்கு கொடுங்கள்’

-முன்னாள் சம்ளேன காரியாலயப் பொறுப்பாளர் ஜப்பார்-

‘நான் மொத்தமாக 3,96,000 ரூபாவைச் செலுத்தியுள்ளேன். இப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொடுப்பதாக பூச்சாண்டி காட்டுகிறார்கள். எனது ஹராமான பணத்தை திருப்பித் தந்து விட்டு CSU or CID or CIB அல்லது MOU வுக்கு கொடுக்கட்டும். அதன் மூலமாவது எனக்கு ஓர் நல்ல தீர்வு கிடைக்கும். இத்துடனா வது இது முடியுமா?’ என்ற கேள்விக் குறியுடன் ‘வார உரைகல்’லுக்கு விளக்க அறிக்கையொன்றைத் தந்துள்ளார் நமது  சம்மேளனத்தின் முன்னாள் அலுவலகப் பொறுப்பாளரான ஜனாப் எம்.ஏ.எம். ஜப்பார்.   

கடந்த மாதம் 27ம் திகதியிட்டு அவர் கையளித்துள்ள இவ்வறிக்கையுடன் ஏற்கனவே 29.08. 2009ம் திகதியிட்டு சம்மேளனப் பிரதிச் செயலாளர் அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தையும், 2010.03.19ம் திகதி அவர் சம்மேளனத்திற்கு எழுதிய தனது இறுதிக் கடிதத்தையும் ‘வார உரைகல்’ பிரசுரிப்புக்காகச் சமர்ப்பித்துள்ளார்.

அவர் ‘வார உரைகல்’ லுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: Continue reading

முன்னாள் நல்லாட்சி உறுப்பினர் மன்சூர் எழுதும் விளக்கம்

கடந்த 07.05.2010 அன்று வெளியாகிய ‘வார உரைகல்’ பத்திரிகையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபைக்கான நான்காவது உறுப்பினராகப் பதவியேற்றிருக்கும் BCAS நிறுவனத்தின் பணிப்பாளர் கௌரவ.M.M. அப்துல் றகுமான் அவர்களது முற்போக்கான சிந்தனையுடனான எமதூருக்கான நல்லாட்சியை நோக்கிய நகர்வுகள் குறித்து பொது மக்களுக்கு தெரிவித்ததையிட்டு எனது மன மார்ந்த நன்றிகளைத் தெரித்துக்கொள்ளும் அதே வேளையில்,

நகரசபை உறுப்பினர் அப்துல் றகுமான் அவர்களுக்கு முன்னர் காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில் பதவி வகித்த உறுப்பினர்கள் காத்திரமான பங்களிப்புக்கள் எதனையும் செய்யவில்லை என்பது போல் குறித்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் இவ்விளக்கத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை எனது உறுப்புரிமைக் காலத்தில் நான் ஆற்றிய சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு அறியக் கிடைக்காமைக்கு காரணமாக நான் கருதுவது: Continue reading