ஜூன், 2010 க்கான தொகுப்பு

UNDP ஏற்பாடு செய்த வெளிக்களப் பயணத்தில் நல்லாட்சி உறுப்பினர் புறக்கணிப்பு

மது பிரதேசத்தின் ஆற்றங்கரையோரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் சாக்கடைக் கழிவுகளை அகற்றி அதன் மூலம் சூழலைச் சுத்தி கரிக்கும் UNDPயின் அபிவிருத்தி வேலைத் திட்டம் தொடர்பான மூன்று நாள் வெளிக்களப் பயிற்சிப் பயணத்தில் நமது நகர சபையின் நல்லாட்சி உறுப்பினர் பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.எம். அப்துர் றஹ்மான் புறக்கணிக் கப்பட்டிருப்பதாக ‘வார உரைகல்’ லுக்குத் தெரிய வந்துள்ளது.

UNDPயின் 44 மில்லியன் ரூபா நிதிமூல வளத்திலான இவ்வேலைத் திட்டம் பூரணப்படுத்தப்பட்டு அடுத்த மாதத்தில் நகர சபைக்கு UNDPயினால் பொறுப்பளிக்கப்பட உள்ளதால் அத்திட்டத்தை செயற்படுத்தும் முறைகள் தொடர்பாக நகரசபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர்கள், நகர சபை உத்தியோகத்தர்கள் போன்றோரை இதே வகையான திட்டம் செயற்படுத்தப்படும் வேறு பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பிப்பதும், அதுதொடர்பான தொழில் நுட்பத் தகவல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்குவதும்தான் பெரும் பணச்செலவில் UNDP ஏற்பாடு செய்திருந்த இவ்வெளிக்களப் பயணத்தின் நோக்கமாகும். Continue reading

கடற்கரை வீதியின் அவல நிலை தீருமா?

காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் மர்சூக் அகமட் லெப்பை, ஆளுந்தரப்பு உறுப்பினர் ஜனாப் எம்.வஹாப், நல்லாட்சி உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் தினமும் தமது சபை அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் செல்வதற்காகப் பயன்படுத்தும் இக்கடற்கரை வீதி நமது நகரின் மிக முக்கியமான ஒரு உள்ளக வீதியாகும்.

இந்த மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமன்றி அன்றாடம் அதிகாலை முதல் நள்ளிரவு தாண்டிய பின்னரும் ஆரக்கணக்கான பாதசாரிகளும், நூற்றுக்கணக்கான வாகனங்களும் இவ்வீதியால் பயணித்து வருகின்றனர்.

இவ்வீதியில் வெள்ளைத்தம்பி ஹோட்டலுக்கு அருகில் கழிவு நீர்க்குழாயொன்றின் மூலம் எவ்வேளையிலும் அசுத்தமான கழிவு நீர் வீதியில் வடிந்தோடியவாறே இருக்கின்றது. Continue reading

நின்று கொண்டே வாசிக்கும் நிலை என்று மாறுமோ நம் நூலகத்தில்…?

காத்தான்குடி பொது நூலகத்தில் பெண்களுக்கான பத்திரிகை வாசிப்புப் பகுதி நூலக நுழைவாசலிலேயே அமைந்துள்ளதாக ‘வார உரைகல்’லிடம் மாணவிகள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நூலகத்திற்குச் செல்லும் தொடக்கப் பாதையில் ஓரமாகப் போடப்பட்டுள்ள மேசை ஒன்றிலேயே முதல் நாளைய தினசரிப் பத்திரிகைகள் கோர்த்துக் கட்டப்பட்டு வாசிப்புக்காக வைக்கப் பட்டுள்ளன.

அதன் முன் நின்ற நிலையிலேயே பெண் மாணவிகள் பத்திரிகைகளை வாசிக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். Continue reading

காத்தான்குடி புதிய வைத்தியசாலை ஜூலை 14ல் திறக்கப்படும்

புதிதாக நிர்மானிக்கப்பட்டுவரும் காத்தான்குடி வைத்தியசாலை எதிர்வரும் ஜூலை மாதம் 14ம் திகதி புதன்கிழமை வைபவ ரீதியாக பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் உப தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் ‘வார உரைகல்’ லுக்குத் தெரிவித்தார்.

Continue reading

ஸாவியா பள்ளிவாசல் கட்டிடப் பணியும் இடை முடக்கம்!

காத்தான்குடி முதலம் குறிச்சி ஸாவியா வீதியில் அமைந்துள்ள ஸாவியா பள்ளிவாசலின் புதிய கட்டடப் பணிகளும் பல மாதங்களாகவே தடைப்பட்டுள்ளதாக அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் ‘வார உரைகல்’ லிடம் தெரிவித்துள்ளார்கள்.

முன்னிரு வாரங்களிலும் வெளியான் ‘வார உரைகல்’ பதிவுகளில் பிரசுரிக்கப்பட்ட ‘மஸ்ஜிதுல் அக்ஸா’ வடிவிலான புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலின் கட்டிடப் பணிகள் முடக்கமாகியுள்ள விவரங்களைப் படித்தறிந்த ஸாவியா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் பலரும் ‘வார உரைகல்’ விற்பனையில் கடந்த வாரம் ஈடுபட்டு இருந்தபோது தமது பள்ளிவாசல் கட்டிடப் பணிகளும் அவ்வாறே இடைநடுவில் முடக்கமாகியுள்ளதைப்பற்றி விவரித்தனர். Continue reading

சம்மேளனத்திற்கு பொறியியலாளர் எழுதிய கடிதம்:

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரம் தொடர்பில் இம்மாவட்ட முஸ்லிம் சமூக நாடாளுமன்றப் பிரதிநிதிகளும், சிவில் சமூக தாய் நிறுவனமான சம்மேளனமும் புறக்கணிக்கப்பட்டுவரும் இக்காலப்பகுதியில் தனது பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் இவ்விவகாரத்தில் கூடிய அக்கறை கொண்டு செயற்பட்டுவரும் காத்தான்குடி நகரசபை நல்லாட்சி உறுப்பினரும், சம்மேளனத்தினால் மீள்குடியேற்ற விவகாரங்களுக்காக நியமிக்கப்பட்ட விஷேட குழு உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் கடந்த 20ம் திகதியன்று நடைபெற்ற நமது சம்மேளனக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதிருந்த வேளையிலும் சமூகப் பொறுப்புடன் சம்மேளன நிர்வாகத்தின் கவனத்திற்கும், பரிசீலனைக்குமாக 19.06.2010 அன்று எழுதி அனுப்பியிருந்த இக்கடிதம், இம்மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலுமாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் நலன் கருதியும், அவர்களின் கவனயீர்ப்பை வேண்டியும் இங்கே முழுமையாகப் பிரசுரிக்கப்படுகின்றது.                                              (பிரதம ஆசிரியர்)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்…

மீள் குடியேற்ற நடவடிக்கைகளும் முஸ்லிம்களும்

தவிர்க்க முடியாத காரணத்தினால் நாளை (20.06.2010) நடை பெறவுள்ள சம்மேளனத்தின் வாராந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு முதலில் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு நாளையக் கூட்டத்தில் கண்டிப்பாகக் கலந்துரையாட வேண்டும் என நான் கருதிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு முன் வைப்பதற்காக இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

கடந்த சம்மேளனக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசாங்க நடவடிக்கைககள் தொடர்பாகவும், குறிப்பாக கடந்த 15.06.2010 அன்று மட்டக்களப்புக் கச்சேரியில் நடாத்தப்பட்ட உயர் மட்டக் கூட்டம் தொடர்பாகவும் நாம் பேசியிருந்தோம். Continue reading

டெங்கை ஒழிக்க இங்கே செல்க…

காத்தான்குடி இஸ்லாமிய கலாசார நிலையத்திற்குப் பின்புறமாக இயங்கிவரும் மகப்பேற்று பிரசவ விடுதியின் முன் புறத்திலும், பின் பக்கத்திலும் புற்களும், புதர்களும் பெருமளவில் வளர்ந்து காணப்படுகின்றன.

இதனால் நுளம்புப் பெருக்கம் இரவிலும் பகலிலும் அதிகரித்துக் காணப்படுவதாகவும், துர்வாடை வீசுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வீடு வீடாகச் சென்று பரிசோதித்து பொதுமக்களுக்கு கறாரான கட்டளைகளைப் பிறப்பித்து வரும் சுகாதரப் பிரிவினரும், நகரசபை நிர்வாகமும் உடனடியாக இங்கு சென்று சுத்திகரிப்புப் பணிகளிலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

பொறுப்புள்ள இளம் சமூகத்தின் பாதை: 2

அஷ்ஷஹீத் செய்யித் குத்ப் (ரஹி) அவர்கள் எகிப்தின் சிறைக் கூடங்களில் சித்திரவதைப் பட்டுக் கொண்டிருந்த காலங்களில் கூறிய வார்த்தைகளை இவ்விடத்தில் எடுத்து நோக்குவது பொருத்தம் என நினைக்கிறேன்.

‘நாம் நமக்காக மட்டும் வாழும் போது நம் வாழ்வு குறுகியதாகவும் பலவீனமானதாகவும் தோன்றுகின்றது. நம் வாழ்வு தொடங்கிய புள்ளியில் இருந்து நம் ஆயுள் முடியும் புள்ளியில் அது முடிவடைந்து போகிறது. ஆனால், பிறருக்காகவோ அல்லது ஒரு சிந்தனைக்காகவோ நாம் வாழும்போது அந்த வாழ்வு ஆழமும் நீளமும் கொள்கிறது. மனித இனத் தோற்றத்தில் இருந்து இப்பூமியை விட்டு நாம் விடைபெற்ற பிறகும் அது நீள்கிறது.’ Continue reading

காத்தான்குடி ஜம்இய்யாவில் குழப்பம்! தாக்குதலுக்கு கதிரையுடன் தயாரானார் மௌலவி!!

காத்தான்குடி உலமா சமூகம் பற்றிப் பிடித்துள்ள ஒற்றுமையெனும் கயிறு இத்துப்போய் பலவீனப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

கடந்த பல வாரங்களாக இப்பிரதேசத்தில் ஏற்பட்ட பலதரப்பட்ட இஸ்லாமிய விவகாரங்களுக்கும் சரியான தீர்வுகளைக் காணாமல் விவாதங்களோடும், வாதப் பிரதிவாதங்களோடும் கலைந்த உலமாக்களின் அமர்வுகள், கடந்த வாரத்தில் கைகலப்புக்குத் தயாராகும் நிலைக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Continue reading

மெத்தைப்பள்ளி வித்தியாலய ஆர்ப்பாட்டம்: இதன் முன்னணி பின்னணி என்ன?

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறும், இப்பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறும் கோரி அவ்வித்தியாலயத்தின் முன்பாக கடந்த 21ம் திகதி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இதில் அப்பாடசலை மாணவர்களும்,பெற்றோர், நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

இவ்வார்ப்பாட்டம் தொடர்பாக பலரும் ‘வார உரைகல்’ லுக்குத் தகவல் தந்து உடனடியாக கமெராவும் கையுமாக ஓடோடி வருமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த போதிலும்,

ஏற்கனவே இப்பாடசாலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள், அதிபர் பெறும் கொமிஷன் உள்ளிட்ட பலதரப்பட்ட ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும்பற்றி விலாவாரியாகச் சுட்டிக்காட்டி இதையெல்லாம் கவனியாமல் பெற்றோரும், கல்வித் திணக்கள அதிகாரிகளும், சம்மேளனக் கல்விக் குழுவும் கண் மூடியிருப்பதாக ‘வார உரைகல்’ விழிப்புக் கட்டுரை எழுதியபோது; Continue reading