ஜூன் 29th, 2010 க்கான தொகுப்பு

UNDP ஏற்பாடு செய்த வெளிக்களப் பயணத்தில் நல்லாட்சி உறுப்பினர் புறக்கணிப்பு

மது பிரதேசத்தின் ஆற்றங்கரையோரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் சாக்கடைக் கழிவுகளை அகற்றி அதன் மூலம் சூழலைச் சுத்தி கரிக்கும் UNDPயின் அபிவிருத்தி வேலைத் திட்டம் தொடர்பான மூன்று நாள் வெளிக்களப் பயிற்சிப் பயணத்தில் நமது நகர சபையின் நல்லாட்சி உறுப்பினர் பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.எம். அப்துர் றஹ்மான் புறக்கணிக் கப்பட்டிருப்பதாக ‘வார உரைகல்’ லுக்குத் தெரிய வந்துள்ளது.

UNDPயின் 44 மில்லியன் ரூபா நிதிமூல வளத்திலான இவ்வேலைத் திட்டம் பூரணப்படுத்தப்பட்டு அடுத்த மாதத்தில் நகர சபைக்கு UNDPயினால் பொறுப்பளிக்கப்பட உள்ளதால் அத்திட்டத்தை செயற்படுத்தும் முறைகள் தொடர்பாக நகரசபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர்கள், நகர சபை உத்தியோகத்தர்கள் போன்றோரை இதே வகையான திட்டம் செயற்படுத்தப்படும் வேறு பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பிப்பதும், அதுதொடர்பான தொழில் நுட்பத் தகவல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்குவதும்தான் பெரும் பணச்செலவில் UNDP ஏற்பாடு செய்திருந்த இவ்வெளிக்களப் பயணத்தின் நோக்கமாகும். Continue reading