ஜூன் 11th, 2010 க்கான தொகுப்பு

‘நெல்சிப்’ திட்டத்திற்கான அபிவிருத்தி நிதி 10 கோடி ரூபா! பயனாகுமா? பாழாகுமா??

வடக்கு – கிழக்கு உள்ளுராட்சி சேவைகள் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலைத் திட்டத்தையே ‘நெல்சிப்’ என்று கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதியேற்ற காலத்திலிருந்து அவரின் ‘மஹிந்த சிந்தனை’ என்ற வேலைத் திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்புடன் கடந்த காலங்களில் ‘ஜனசவிய, கமநெகும,  மக நெகும’ போன்ற பெயர்களிலெல்லாம் பலதரப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என்றாலும் எமது பிரதேசத்தில் கொங்றீட் வீதிகளே இவ்வாறான திட்டங்களின் மூலம் பெருவாரியாக அமைக்கப்பட்டுள்ளதை நமது மக்கள் அறிவார்கள்.

‘ஜனசவிய, கமநெகும,மகநெகும’ ஆகிய வேலைத்திட்டங்களைப் போன்ற மக்கள் பங்களிப்புடன் இடம்பெறவேண்டிய ஒரு வேலைத் திட்டமே இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நெல்சிப்’ திட்டமுமாகும். Continue reading