ஜூன் 9th, 2010 க்கான தொகுப்பு

முன்னாள் நல்லாட்சி உறுப்பினர் மன்சூர் எழுதும் விளக்கம்

கடந்த 07.05.2010 அன்று வெளியாகிய ‘வார உரைகல்’ பத்திரிகையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபைக்கான நான்காவது உறுப்பினராகப் பதவியேற்றிருக்கும் BCAS நிறுவனத்தின் பணிப்பாளர் கௌரவ.M.M. அப்துல் றகுமான் அவர்களது முற்போக்கான சிந்தனையுடனான எமதூருக்கான நல்லாட்சியை நோக்கிய நகர்வுகள் குறித்து பொது மக்களுக்கு தெரிவித்ததையிட்டு எனது மன மார்ந்த நன்றிகளைத் தெரித்துக்கொள்ளும் அதே வேளையில்,

நகரசபை உறுப்பினர் அப்துல் றகுமான் அவர்களுக்கு முன்னர் காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில் பதவி வகித்த உறுப்பினர்கள் காத்திரமான பங்களிப்புக்கள் எதனையும் செய்யவில்லை என்பது போல் குறித்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் இவ்விளக்கத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை எனது உறுப்புரிமைக் காலத்தில் நான் ஆற்றிய சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு அறியக் கிடைக்காமைக்கு காரணமாக நான் கருதுவது: Continue reading

சம்மேளனத்தின் முன்னுள்ள பொறுப்புக்கள் – ஆசிரியர் எழுத்து: பதிவு 140 (04.06.2010)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் 2010ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு கடந்த மாதம் 30ம் திகதி இடம்பெற்று முடிவடைந்துள்ளது.

நடப்பாண்டிற்கான சம்மேளனத்தின் தலைவர் பதவியானது, பதவி வழியாக காத்தான்குடி 5ம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவரான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். இஸ்மாயில் அவர்களுக்குச் சென்றுள்ளது.

அந்த வகையில் புதிய தலைவருக்கு ‘வார உரைகல்’ தனது வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் புதிய தலைமைத்துவத்திற்கும், நிருவாக சபைக்கும் முன்னாலுள்ள பொறுப்புக்களையும், கடமைகளையும் சுட்டிக்காட்டவும் விரும்புகின்றது. Continue reading