ஜூன் 12th, 2010 க்கான தொகுப்பு

தொடரும் காத்தான்குடி குத்பாக்களின் அவலங்கள்! ஜம்இய்யாவும் சம்மேளனமும் தீர்வு கண்டாக வேண்டும்!!

மது காத்த மாநகர், உலமாப் பெருந்தகைகளினால் நிரம்பிய ஊர் என்ற பெருமையுடனும், எம்மை வழி நடாத்தும் ஊரின் இரு கண்களான ஜம்இய்யதுல் உலமாவும், சம்மேளனமும் இருந்து மிகச் சிறப்பான முறையில் வழி நடாத்தப்பட்டு வந்த எமதூரில் அண்மைக் காலமாக வெள்ளிக்கிழமை குத்பாக்களின் சில சீர் கேட்டினால் நாம் கட்டிக்காத்து வந்த எமது ஒற்றுமை குலைந்து நிற்பதனைக் காணும்போது மனதுக்குச் சங்கடமாக இருக்கின்றது. Continue reading

ஆஹா..! இது என்ன ஆச்சரியம்?

 ‘சமூகத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது’

-பிரதியமைச்சர் பேசினாராம் என்கிறது ‘விடிவெள்ளி’-

ஊடகவியலாளர்கள்தான் சமூகத்தைக் கட்டியெழுப்புகின்றவர்கள். ஒரு விடயத்தில் இருக்கின்ற நன்மை தீமைகளை வெளிக்கொண்டு வந்து மக்களைத் தட்டியெழுப்பித் தீர்வு காண்பவர்களும் ஊடகவியலாளர்கள்தான். மக்களுக்கு விழிப்பூட்டுகின்ற இந்த நல்ல பணியை ஊடகவியலாளர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார் என்று கடந்த 03ம் திகதி வெளிவந்துள்ள ‘விடிவெள்ளி’ வாரப் பத்திரிகை அதன் 02ம் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஏனைய ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இச்செய்தியை எப்படிப் பார்த்திருந்த போதிலும் ‘வார உரைகல்’ லைப் பொறுத்தவரைக்கும் அதை மிக மிக ஆச்சரியமானதொரு செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.

‘விடிவெள்ளி’ பத்திரிகையின் மருதமுனைச் செய்தியாளர் எழுதியுள்ள அச்செய்தியில் பிரதியமைச்சர் அல்ஹாஜ். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பேசியுள்ளதாக இடம்பெற்றிருக்கின்ற பகுதிகள் வருமாறு: Continue reading

முடிவுகளின்றிக் கலையும் ஜம்இய்யதுல் உலமாவின் கூட்டங்கள் (ஆசிரியர் எழுத்து: 11.04.2010 – பதிவு:141)

காத்தான்குடி பெரும்பான்மையான முஸ்லீம்களைக் கொண்டதோர் தனித்துவமான நகரம்.

இந்நகர மக்களின் இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய முதன்மை நிறுவனம் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவாகும்.

காத்தன்குடி ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் அது பல்வேறு சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கி தாக்குப்பிடித்து செயற்பட்டு வந்துள்ளது.

ஒரு சமய நிறுவனம் என்ற வகையில் மார்க்க ரீதியாக எழுகின்ற எவ்வாறான நிலைமைகளையும் கையாள வேண் டிய பொறுப்பும், கடமையும் ஜம்இய்ய துல் உலமாவுக்கே உள்ளது என்ற வகையில் 1978 மற்றும் 2004ம் ஆண்டுகளில் காத்தான்குடியில் தோற்றம் பெற்ற அகீதா தொடர்பான முரண்பாடுகள் ஒருவிதத்தில் கையாளப்பட்டு அது ஈற்றில் வன்முறை வரைக்கும் சென்றதோடு நான்கு உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழக்க வேண்டியும் ஏற்பட்டது.

அத்தோடு காத்தான்குடி என்ற எமது நகருக்கு சர்வதேச அரங்கில் வித்தியாசமான பார்வைகளையும் தோற்றுவித்தது.  இந்தப் பிரச்சினைகள் கூட இன்றும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.

அவை அவ்வாறிருக்க, தற்போது நம் காத்தான்குடியின் மார்க்க நிலவரம் இன்னும் மோசமான நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

அண்மைக் காலமாக தஃவா அமைப்புக்கள் எனத் தங்களை இனங்காட்டிக் கொள்கின்ற பல அமைப்புக்கள் மார்க்க ரீதியாக கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்கள் தொடர்பில் தனித் தனியாக பள்ளிவாயல்களை அமைத்தல், சனசமூக நிலையங்கள், வீடுகள் என்பவற்றில் ஜும்ஆக்களை ஆரம்பித்தல், கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்கள் தொடர்பில் ஒருவருக்கொருவர் முரண்பாடான மார்க்கத் தீர்ப்புக்களை வழங்குதல் என மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். Continue reading

‘மஸ்ஜிதுல் அக்ஸா’ வடிவிலான புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசல் கட்டப்படுமா? கைவிடப்படுமா??

புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலின் புதிய கட்டிட நிர்மான வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது குறித்து மேற்படி பள்ளிவாசல் மஹல்லாவாசிகளும், பிரதேசப் பொதுமக்களும் அதிருப்தியடைந்துள்ளதுடன் இதுகுறித்து ‘வார உரைகல்’ லிடம் அவர்கள் தினமும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  
இப்பள்ளிவாசல், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், இந்நாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சருமான் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியால் ஜனாதிபதி நிதியத்திலிருந்து கிடைக்கப்பெறும் 15 கோடி ரூபா செலவில் புத்தம் புதிதாகப் புனர்நிர்மானம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு சம்பூரணமாக இடித்துத் தரைமட்டமாக ஆக்கப்பட்டது.

முஸ்லிம்களின் ஆதிமுதல் கிப்லாவாகவும், மூன்று புனிதப் பள்ளிவாசல்களில் ஒன்றாகவும் மதிக்கப்படுகின்ற ‘மஸ்ஜிதுல் அக்ஸா’வின் தோற்றத்தில் இப்பள்ளிவாயல் நிர்மாணிக்கப்படுவதற்கான ஆயத்த வேலைகள் பெரும் பரபரப்புடன் தொடங்கப்பட்டது.

இதற்காக அவசர அவசரமாக பழைய பள்ளிவாயல் கட்டிடம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் திகதியன்று  சுபஹ் தொழுகைக்குப் பின் இடிக்கப்பட்டதுடன், தொழுகைக்கான இடமும் தற்காலிமாக வேறிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. Continue reading