ஜூன், 2010 க்கான தொகுப்பு

சம்மேளன இருப்பில் காட்டப்பட்ட 1,00,000 ரூபாவுக்கான காசோலை எங்கே?

தாய் வீட்டு விவகாரங்கள் :4

காத்தான்குடி சமூகத்தின் தாய் நிறுவனம் எனக் கருதப்படும் சம்மேளனத்தின் வாராந்தக் கூட்டம் கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலையில் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் கூடியதாம்.

ஆரம்பத்திலேயே மீள்குடியேற்ற அமைச்சரின் காத்தான்குடி வருகை தொடர்பில் சம்மேளன நிர்வாகத்தின் சார்பில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற முரண்பட்ட சந்திப்பு குறித்த விடயம் விவாதப் பொருளாகி, அதனுடன் நகர சபையின் நல்லாட்சி உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் ‘வார உரைகல்’ மூலம் விடுத்த கண்டன அறிக்கையையும் சேர்த்துக் கொண்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டனவாம்.

தொடக்கத்தில் பொருளாளர் பஷீர் ஹாஜியார் அது தொடர்பான நீண்ட விளக்கமொன்றை சபையில் விலாவாரியாக எடுத்துக் கூறியதுடன் முன்னாள் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் சுபைர் CC அவர்களை நோக்கி அமைச்சரைச் சந்திக்காததற்கான காரணத்தைத் தெரிவிக்கும்படி வேண்டிக் கொண்டாராம். Continue reading

தாய் வீட்டுச் சமாச்சாரங்கள்: 3

பொதுத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கு ஆளுந்தரப்பு அங்கத்தவராக நியமனம் பெற்ற உறுப்பினர் ஒருவர் தனது அரசியல் அதிகாரப் பலத்தைப் பிரயோகித்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் அனுமதியின்றி பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட காணியில் பாலர் பாடசாலையொன்றை அத்துமீறி அமைத்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பில் சம்மேளனத்திற்கு அப்பள்ளிவாயல் நிர்வாகிககள் முறையீடு செய்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்றேல் நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமாச் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்களாம். Continue reading

பொறுப்புள்ள இளம் சமூகத்தின் பாதை – பாகம்:1

-ஆர். இஸ்ஸதுன்னிஸா-

காஸாவிற்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் சென்ற இரண்டாவது கப்பலும் இஸ்ரேலினால் இடை மறிக்கப்பட்டதை அறிந்த கணப்பொழுதுகளில் மீண்டும் எம் கண்களில் கண்ணீர் முட்டிற்று.

‘என் சமூகத்தின் ஒரு சாரார் இப்பிரதேசத்தில் போராடிக் கொண்டே இருப்பார்கள்’ எனும் பெருமானாரின் வாக்கு பொய்யாகி விடப் போவதில்லை. மனச்சாட்சி கொண்ட எந்த மனிதனும் பலஸ்தீனை நினைக்கையில் பதறித்தான் போவான்.

அற்ப அரசியல் இலாபங்களுக்காகவும், உலக மோகங்களுக்காகவும், கீழ்த்தரமான ஆசைகளுக்காகவும் நாம் தனித்தனியாகவும், சமூகம் சமூகமாகவும், நாடு நாடாகவும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் காலங்களிலே; கொண்ட கொள்கைக்காக, உறுதி பூண்ட உண்மைக்காக உணவிழந்து, உடையிழந்து, உறக்கமிழந்து, உறவுகளை இழந்து நடுத்தெருக்களில் தமது உயிர்களை மட்டும் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த உறவுகளை நினைக்கையில் நாமெல்லாம் இறைவன் சந்நிதியில் எவ்விடம் என எண்ணத் தோன்றுகிறது. Continue reading

தாய் வீட்டுச் சமாச்சாரங்கள்: 2

செலிங்கோ ப்ராபிட் செயரிங் நிதி நிறுவனத்தில் தமது முதலீடுகளை வைப்புச் செய்து பாதிக்கப்பட்ட வைப்பாளர்கள் எல்லோரும் சம்மேளனத் தலைமையில்  ஒன்றிணைந்து மருத்துவத்துறைத் தலைவர் ஒருவரைத் தலைவராக்கி இருந்தார்களாம்.

அவரது வைப்புத் தொகை கிட்டத்தட்ட ஆறரை இலட்சமாம். காத்தான்குடி செலிங்கோ வங்கியில் இருந்த சில பொருட்களை விற்றுச் சேர்த்து தலைவர் என்ற ரீதியில் அவரிடம் நாலரை இலட்சம் ரூபா அளவில் செலிங்கோ நிறுவனத்தால் கையளிக்கப்பட்டதாம். Continue reading

ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமியக் கண்காட்சி – 2010 – ஒரு கண்ணோட்டம் –

‘அல்-குர்ஆனின் அறிவியல் அற்புதமும், உலக நாகரீகத்திற்கு முஸ்லீம்களின் அறிவியல் பங்களிப்பும்’ எனும் கருப்பொருளில் அமைந்த பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் மாபெரும் இஸ்லாமியக் கண்காட்சி கடந்த வாரத்தில் நளீமிய்யா வளாகத்தில் வெகு சிறப்பாகவும், நேர்த்தியாகவும் இடம்பெற்றது.

கண்காட்சி என்பது ஒரு புறமிருக்க, இலங்கை மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் அந்த அறிவியல் வளாகத்தை நேரில் சென்று கண்டு திரும்புவது என்பது ஒரு பெறற்கரிய பாக்கியமே என்பதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பேணிப் பாதுகாக்க வேண்டிய, இஸ்லாமிய அறிவியல் சமூகம் உரமூட்டி மென்மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய, ஈழத்து அறிவியல் கலாகூடங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டாக வேண்டிய ஒரு உயர்ந்த உன்னதமான இடமே அந்த ஜாமிஆ நளீமிய்யா என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமிருக்க முடியாது. Continue reading

சிறப்பு மிகு கல்வி (கவிதை)

கல்வியெனும் தலைப்பினிலே கவிதையிதை நானெழுத
கல்வியெனும் செல்வமதை கருணைநிறை இறையோனே
முழுஞானம் நிறைந்தோனே முதலவனே அல்லாஹ்வே
முழுமனதாய் வேண்டுகிறேன் நிறைவாக அருள்புரிவாய்!

வற்றாத கடலதனின் ஆழமதைக் கண்டாலும்
வளமான கல்வியதன் கரைகாணல் முடியாதே!
எத்துறை தன்னதிலும் நாம் பட்டங்கள் பெற்றாலும்
எல்லாக் கல்வியும் நாம் பெற்றவராய் முடியாதே! Continue reading

PMGG நிதி உதவியால் பிடுங்கி நடப்படவுள்ள மின்கம்பம்

புதிய காத்தான்குடி – 6, அப்றார் நகர் வீதியிலுள்ள முகைதீன் மூத்தோர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக AF/6ம் இலக்க இம்மின்கம்பம் வீதியின் நடுவில் காணப்படுகின்றது. 

இதனை வீதியின் ஓரமாக நாட்டித்தருமாறு பொதுமக்கள் மின்சார சபையினரிடம் கேட்டிருந்த போதிலும் அதற்குரிய செலவைச் செலுத்த வேண்டுமென அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபை உறுப்பினர் பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.எம். அப்துர் றஹ்மானிடம்  முகைதீன் மூத்தோர் சங்கச் செயலாளர் ஜனாப் கே.எம்.எம்.ஏ.காதர் தெரிவித்ததன்பேரில் அவர் காத்தான்குடி மின்சார சபை உப அலுவலகப் பொறியியலாளருடன் தொடர்பு கொண்டு அதற்குரிய செலவைச் செலுத்துவதாகத் தெரிவித் துள்ளதாகவும்,

விரைவில் இம்மின்கம்பம் வீதியோரமாகப் பிடுங்கி நாட்டப்படும் என அவர் உறுதியளித்துள்ளதாகவும் ஜனாப் காதர் ‘வார உரைகல்’ லிடம் தெரிவித்தார்.

இம்மின் கம்பம் குறித்து  ‘வார உரைகல்’ ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இமாம் கொமெய்னி நினைவு தின விழாவுக்காக ஈரான் சென்ற இலங்கைக் குழுவினர்

ரான் இஸ்லாமியக் குடியரசின் அழைப்பின் பேரில் இமாம் அல்கொமெய்னி அவர்களின் 21வது நினைவு தின விழா நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண சபை முதல்வர் அல்ஹாஜ் மௌலவி ஹஸன் அஸ்ஹரி அவர்களின் தலைமையில் சென்றிருந்த இலங்கைக் குழுவினர், பாரசீகப் பெருங்கவிஞர் அல்லாமா பிர்தௌஸி அவர்களின் நினைவு மண்டபத்திற்கும் விஜயம் செய்தபோது எடுத்துக் கொண்ட படமே இங்கு பிரசுரமாகியுள்ளது.

படத்தில் பிலால் எம்போரியம் உரிமையாளரும், சமூக ஆர்வலருமான அல்ஹாஜ் கே.எம்.எம். கலீல் ஜே.பி, சட்டத்தரணி எம்.எம். உவைஸ், மன்னார் எருக்கலம்பிட்டி உதவிச் சுங்க அத்தியட்சகர் அல்ஹாஜ் லுக்மான் சஹாப்தீன் ஆகியோரும்  காணப்படுகின்றனர்.

கொங்றீட் வீதிகளில் கிடைத்த கொமிஷன் பணத்திற்கு 5000 மாணவர்கள் வீதம் 10 வருடங்களுக்கு உதவி வழங்கலாம்

-சமூக அபிவிருத்திக் கூட்டத்தில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான்-

துவரை போடப்பட்டள்ள கொங்றீட் வீதிகளுக்காகப் பெறப்பட்டுள்ள கொமிஷன் பணத் தொகைக்கு வருடாந்தம் 5000 மாணவர்கள் வீதம் 10 வருடங்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளையும், பாடசாலை உபகரணங்களையும் வழங்க முடியும் என்று காத்தான்குடி நகரசபையின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர் பொறியியலாளர் அல்ஹாஜ் எம். எம். அப்துர் றஹ்மான் கூறினார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சமூக அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய காத்தான்குடி கிழக்கு 167B கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடந்த 14ம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெற்ற அப்பகுதி மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய காத்தான்குடி கிழக்கு பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது: Continue reading

சுகாதாரச் சீர்கேடான நிலையில் காத்தான்குடி கடல் முகம்! நகரசபை கவனிக்குமா?

காத்தான்குடி நகர சபை வாழ் மக்களின் ஒரேயொரு பொழுதுபோக்குப் பிரதேசமாகத் திகழும் கடற்கரை முகம் முழுவதும் கட்டாக்காலி நாய்களாலும், மாடுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அசுத்தமாக்கப்படுவதாகவும்,

இங்குள்ள மின்கம்பங்களில் நகரசபை நிர்வாகத்தினரால் சங்கிலிகள் இடப்பட்டு நிறுவப்பட்டிருந்த கழிவுப் பொருட்களைப் போடுவதற்கான பிளாஸ்டிக் வாழிகள் கவனிப்பாரற்ற நிலையில் அங்குமிங்குமாக சரிந்து காணப்படுவதாகவும், Continue reading