‘வார உரைகல்’ ஆசிரியரை காசுக்கு வாங்க எவராலும் முடியாது! -சம்மேளனக் கூட்டத்தில் உறுப்பினர் தெரிவிப்பு!!

‘வார உரைகல்’ பத்திரிகை ஆசிரியரை விலை கொடுத்து எவராலும் ஒரு போதும் வாங்க முடியாதென காத்தான்குடி பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மே ளன உறுப்பினர் ஜனாப். எஸ்.ஏ. அப்துல் கபூர் தெரிவித்தார்.

கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையில் சம்மேளனத்தின் வாராந்தக் கூட்டம் வழமை போன்று நடைபெற்றது.

அங்கு ‘வார உரை கல்’ தொடர்பாக பலராலும் பிரஸ்தாபிக்கப்பட்ட வேளையிலேயே சம்மேளன உறுப்பினரான அப்துல் கபூர் மேற்கண்டவாறு ஆணித்தரமாகத் தெரிவித்ததாக சம்மேளன வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 20ம் திகதியன்று வெளியான ‘வார உரைகல்’ பத்திரிகையின் 208வது பதிவில் சம்மேளனத் தலைவர் எம்.ஐ.எம். சுபைர், பிர திச் செயலாளர் ஏ.பி.எம். சாதிக்கீன் மற்றும் சம்மேளன முக்கியஸ்தரான கே.எம். கலீல்  போன்றவர்களினால் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருந்தன.

அதுதொடர்பில் சம்மேளனத் தலைவர் எம்.ஐ. எம். சபைர் சமூகமளித்திருந்த உறுப்பினர் களுக்கு விளக்கமளித்தார். பத்திரிகைச் சுதந்தி ரத்தைப் பற்றியும், பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய கடப்பாடுகள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துக்களை அவர் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.

இச்சமயத்தில் கருத்துத் தெரிவித்த சம்மேளன உறுப்பினர் ஷாதுலி ஹாஜியார், ஏற்கனவே சம்மேளன நிர்வாகம் ‘வார உரைகல்’லுடன் பிணங்கி இருந்த வேளையில் அதன் ஆசிரியரை சம்மௌனத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியபோது காணப்பட்ட இணக்கப்பாட்டை சம்மேளனத் தரப்பில் நடைமுறைப்படுத்தத் தவறியது பற்றியும் சபையில் சுட்டிக்காட்டிய தாகவும் அறியப்படுகின்றது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரோடும் ‘வார உரைகல்‘லைத் தொடர்புபடுத்தி  இக் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் அறியப்படுகின் றது. அவர்கள் பணம் கொடுப்பதனால் அவர் களைப்பற்றி நல்லவிதமாக பக்கம் பக்கமாக ‘வார உரைகல்’லில் எழுதப்படுகிறது. அதே போல் நாமும் ‘வார உரைகல்’லுக்கு காசு கொடுத்தால் நம்மைப் பற்றியும் நல்லவிதமாக நாலு பக்கங்களில் எழுதப்படும் என்றும் சிலர் தமது மட்டகரமான யோசனையை சபையில் வெளிப்படுத்தினார்களாம்.

அச்சந்தர்ப்பத்திலேயே சம்மேளன உறுப்பின ரான அப்துல் கபூர், ‘வார உரைகல்’லை காசு கொடுத்து யாரும் வாங்கலாம். அதன் ஆசிரியரை எவராலும் காசு கொடுத்து வாங்க முடியாது. அவரை நாம்தான் அணுக வேண் டிய முறையில் அணுகி நமது செயற்பாடுகளை யும் அப்பத்திரிகையில் இடம்பெறச் செய்ய வேண்டும்’ என்ற கருத்தைத் தெரிவித்தாராம்.

ஏற்கனவே காத்தான்குடி நகரசபைக் கூட்டத் திலும் ‘வார உரைகல்’ மீது இவ்வாறான ஒரு தப்பபிப்பிராயமான கருத்து அச்சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்களால் முன்வைக்கப் பட்டபோது அச்சபையின் தவிசாளராக இருந்த மர்சூக் அகமட் லெப்பையும் ‘வார உரை கல்’ ஆசிரியர் காசுக்காக எழுதும் பத்திரிகை யாளர் அல்ல’ எனப் பகிரங்கமாகத் தெரிவித்தி ருந்ததையும் இவ்விடத்தில் மீண்டும் பதிவு செய்வது, அவ்வாறான கருத்துக்களைத் தெரி வித்த சம்மேளன உறுப்பினர்களின் சிந்தனைக்கு விருந்தாக அமைவதற்காகவே.

Vaarauraikal – Vol: 209 Date: 27.01.2011

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக