ஒக்ரோபர் 4th, 2013 க்கான தொகுப்பு

மோசடிகள் தொடர்பான விசாரணைகளில் சம்பந்தப்பட அலியார் மௌலவக்கு என்ன அருகதையுள்ளது?

Ex-4குர்ஆன் தமாம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட எட்டு ஹிப்ழு மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 20,000 ரூபாவில் 18,000 ரூபாவினை மோசடியாகக் கொள்ளையிட்ட மௌலவி  ஹாலித் ஹஸன், மற்றும் மபாஸ் மௌலவி ஆகியோரின் நடவடிக்கைகள் தொடர்பாக முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த 01ம் திகதி இரவு இடம்பெற்ற விசாரணையின்போது அப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுடன் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரும், அப்பள்ளிவாசல் நம்பிக்கையாளருமான எஸ்.எம்.எம். அலியார் மௌலவி சம்பந்தப்பட்டிருந்ததை ‘வார உரைகல்’ வன்மையாகக் கண்டிக்கின்றது.

காத்தான்குடியில் இடம்பெறும் ஊழல், மோசடி விவகாரங்களை விசாரிப்பதற்கு அலியார் மௌலவிக்கு எந்தத் தகுதிகளும் கிடையாது எனவும் ‘வார உரைகல்’ வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறது. Continue reading

வேலியே பயிரை மேய்ந்த கதை: மாணவர்களின் பணத்தை ஏப்பமிட்ட உலமா!

moகுர்ஆன் தமாம் செய்யவென பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதலாம் குறிச்சி மீரா ஜீம்ஆப் பள்ளிவாசலில் இயங்கி வருகின்ற ஹிப்ழு குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு, அந்த வீட்டுக்காரர் அன்பளிப்பாக வழங்கிய 20,000 ரூபாவில் 18,000 ரூபாவை மோசடியாக அபேஸ் செய்த இரண்டு மௌலவிகளின் செயற்பாடு பட்டவர்த்தனமாக அம்பலத்திற்கு வந்துள்ளது.

இப்பரபரப்புச் சம்பவம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: Continue reading

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மக்பூல் மௌலவி தாக்கப்பட்டார்!

child abuseகாத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி ஏ.எல்.எம். மக்பூல் என்பவரால் கடந்த மாதம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி பரீத் நகர் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக அன்றிரவே அந்த மௌலவியின் வீட்டுக்குள் பிரவேசித்த இளைஞர் குழுவொன்று அவரை அவரது வீட்டில் வைத்தே குடும்பத்தினருக்கு முன்பாக கடுமையாக நையப்புடைத்ததாகவும் ‘வார உரைகல்’லுக்கு செய்திகள் கிடைத்துள்ளன.

VU - 275குறித்த இளம் மௌலவி காத்தான்குடியின் மூத்த அரசியல்வாதி ஒருவரின் இளைய புத்திரன் என்பதாலும், சமகாலத்தில் பள்ளிவாசல் விவகாரமொன்றில் நம்பிக்கையிழந்து தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவரின் சகோதரர் என்பதாலும் Continue reading

பள்ளிவாசல் தலைவர்களின் பதவிகளுக்கு ஆப்பான நம்பிக்கையில்லாப் பிரேரணை நடைமுறையைத் தடைசெய்ய வேண்டும்.

Sammelanam-(New)காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன வாராந்த நிர்வாக சபைக் கூட்டம் கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, மெத்தைப்பள்ளி வாசல் தலைவரும், முன்னாள் சம்மேளனத் தலைவருமான மர்சூக் அகமட்லெப்பையை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அப்பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் நீக்கிய விவ காரமே முக்கியத்துவமாக ஆராயப்பட்டதென சம்மேளன வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

மெத்தைப்பள்ளிவாசல் நிர்வாக சபையில் இடம்பெற்ற மாற்றங் கள் குறித்து அப்பள்ளிவாசல் சம்மேளனத்திற்கு உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்த கடிதம் சபையில் வாசிக்கப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் அங்கு சூடான பேசு பொருளானது. Continue reading

சிற்றரசி உலகநாச்சியின் சிலைச்சேதம்: கிழக்கில்அ தமிழ் முஸ்லிம் குரோதத்திற்கான கட்டியயமா?

nachchiyar_silai_001ஆரையம்பதி பிரதான வீதியில் நிறுவப்பட் டிருந்த மட்டக்களப்பு மண்முனைப்பற்றின் சிற்றரசி உலக நாச்சியின் உருவச் சிலையை கடந்த 24ம் திகதி செவ்வாய்க்கிழமை பின் னிரவு வேளையில் உடைத்துச் சேதப்படுத்திய நபரொருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த நியாஸ் என்பவரே இவ்வாறு காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவராகும். Continue reading

காத்தான்குடிப் பொதுமக்களே..! உங்களின் கையெழுத்துக்களைப் பாதுகாருங்கள்!!

imagesகா த்தான்குடிப் பிரதேசத்தில் வாழும் பிரமு கர்களும், பொதுமக்களும் தங்களுடைய கை யெழுத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளமாறு மக்கள் ஊடகமான ‘வார உரைகல்’ முன் னெச்செரிக்கையாகக் கேட்டுக் கொள்கின்றது.

காத்தான்குடிப் பிரதேசத்தில் அண்மைக்கால மாக பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுடைய கையெழுத்துக்கள் மோசடியாக ஆவணங்க ளில் இடப்படுவது வழக்கமாகி வருகின்றது. Continue reading