பிப்ரவரி 6th, 2012 க்கான தொகுப்பு

சர்வாதிகாரத் தவிசாளரின் பிரசன்னத்துடன் காங்கேயனோடையிலும் ஷாதுலியா தரீக்காவின் ஹழறா மஜ்லிஸ்

காங்கேயனோடையில் கூவாக்காட்டு வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள அல்மஸ்ஜிதுர் றசூல் பள்ளிவாசலில் வலீபா யாக்கூத்தியா, ஹழரா, முஸாக்கரா மஜ்லிஸ் என்பன கடந்த மாதம் 14ம் திகதி இரவு சிறப்பாக நடாத்தப்பட்டது.

காத்தான்குடி நகரசபையின் சர்வாதிகாரமுள்ள தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதித் தவிசா ளர் எம்.ஐ.எம். ஜெஸீம் ஆகியோரின் ஏற்பாட்டி லேயே இந்த தரீக்கா நிகழ்ச்சிகள் விஷேடமாக அங்கு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Continue reading

காத்தான்குடிக் கடலில் கரையொதுங்கிய திமிங்கலம்! நம்மவர் கற்றுக்கொண்ட படிப்பினைதான் என்ன?

காத்தான்குடிக் கடலில் கடந்த 29ம் திகதி ஞாயிறு அதிகாலை 3:00 மணியளவில் 15அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட சமுத்திர வல்லரசு விலங்கினமான திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியது.

அதனைப் பார்வையிடுவதற்காக அன்றைய தினம் ஆதவன் உதயமானதிலிருந்து இப்பிர தேசத்தின் நாலாபுறமிருந்தும், அயல் கிராமங் களில் இருந்தும் வாகனங்களிலும், நடந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துச் சென்றனர்.  Continue reading