பிப்ரவரி 18th, 2012 க்கான தொகுப்பு

வரலாற்றிலிருந்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பாடம் படிக்க வேண்டும்!

-கேர்ணல் கதாபி – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பற்றி ஒரு கல்லூரி மாணவன் எழுதிய ஒப்பீட்டுக் கட்டுரை-

சமகாலத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வரலாறு என்பது ஒரு கசப்பான பாடமாக இருப் பினும் அதனை அரசு ஒரு கட்டாய பாடமாக ஆக்கியுள்ளதற்கு மிக முக்கியமான அடிப்படை நோக்கம் ஒன்றிருக்கின்றது.

கடந்த கால வரலாறுகளை அறிவதன் மூலமே தனது நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையான சிறந்த படிப்பினைகளைப் பெற்று தன்னை நன்கு வளப்படுத்திக் கொள்ள வேண்டு மென்பதே அந்நோக்கமாகும். Continue reading

பொய்யை எதிர்த்துக் கண்டித்தோர் கடைந்தெடுத்த மற்றுமொரு பெரும் பொய்!

-அப்துர் றஹ்மானின் சொந்தப்புத்தி பற்றிக் கேட்பவர்களிடம் அந்தப்புத்தி அனுவளவேனும் இருக்கிறதா?-

கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற புனித ஜும்ஆத் தொழுகைக்காகச் சென்றிருந்த பொதுமக்களிடம் ‘PMGG இன் கடத்தல் நாடகம்’ என்ற தலைப்பில் காத்தான்குடி மண்ணின் மானம் காக்கப் புறப்பட்டிருந்த முகவரி குறிப்பிடாத ஆர்ப்பாட்டக்காரர்களால் மொட்டைத் துண்டுப்பிரசுரமொன்று விநியோகம் செய்யப்பட்டிருந்தது. Continue reading

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் மீதான தாக்குதல் மற்றும் விமர்சனங்களுக்கு ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் அல்பா நஸார் கண்டனம்!

-பிரித்தானிய தூதுவராலய அதிகாரிகளும் பிரதம ஆசிரியரின் சேமநலன்களைக் கேட்டறிந்தனர்–

கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ‘வார உரைகல்’  பிரதம ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும்,

அன்றைய தினம் ஜும்ஆத் தொழுகைக்குப் பின் பிரதான வீதியில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் ‘வார உரைகல்’ ஆசிரியரையும் சம்பந்தப்படுத்தி விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததற்கும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் ஜனாப். எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். Continue reading

சட்டவிரோத தேர்தல் விளம்பர வழக்கிலிருந்து ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் விடுதலை

சட்டவிரோதமாகத் தேர்தல் விளம்பரம் பிரசுத்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 15.03.2011ல் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்த ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் (வயது: 56) கடந்த 15ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டார். Continue reading