பிப்ரவரி 11th, 2012 க்கான தொகுப்பு

ஹைறாத் பள்ளிவாசல் தலைவர் கஞ்சா வைத்திருந்ததாக காத்தான்குடி பொலிசாரினால் கைது!

புதிய காத்தான்குடி 06ம் குறிச்சி ஹைறாத் நகரில் அமைந்துள்ள ஹைறாத் பள்ளிவாசலின் தலைவர் கச்சி முகம்மது முகம்மது சித்தீக் (வயது 59) என்பவர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Continue reading

எமது பள்ளிவாசல் நிர்வாகிகள் அழ்ழாஹ்வுக்கு அஞ்சுகின்றார்களா? பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கு அஞ்சுகின்றார்களா??

-PMGGயின் மக்கள் சந்திப்பில் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி காட்டமாகக் கேள்வி-

காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் அழ்ழாஹ்வுக்கு அஞ்சியவர்களாகச் செயற்படுகின்றார்களா? அல்லது அரசியல்வாதிகளுக்கு அஞ்சியவர்களாகச் செயற்படுகின்றார்களா? என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி. எம். பிர்தௌஸ் நளீமி கேள்வி எழுப்பினார்.

கடந்த மாதம் 29ம் திகதி மேற்படி இயக்கத்தின் மக்கள் சந்திப்பு அரங்கில் நடைபெற்ற பொது மக்களுடனான சந்திப்பு நிகழ்வின்போதே அவர் அவ்வாறு கேள்வி எழுப்பினார். Continue reading

காத்தான்குடி மாணவிகள் தவறிழைக்கவில்லையென பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் சம்மேளனம் மீண்டும் அறிவிப்பு!

-பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தலா 50 இலட்சம் நஷ்டஈடு வழங்குவது குறித்து பதிலளிக்க 14 நாள் அவகாசம் கோரப்பட்டது-

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக விசாரணை அதிகாரிகளின் பணிப்புக்கமைய கடந்த 20.06. 2011ல் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவமானத்துக்குள்ளான காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் மாணவிகளும் எத்தகைய குற்றமும் அற்றவர்கள் என கடந்த 06ம் திகதியன்று பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலமாக பொதுமக்களுக்கு மீண்டும் பகிரங்க அறிவிப்பொன்றை  காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் செய்தது. Continue reading

கடத்தல் நாடகமாடிய அஸாமுக்கு PMGGயிலிருந்து கல்தா!

-காத்தான்குடி அரசியல் வரலாற்றில் தவறிழைத்த ஆதரவாளனுக்கு தண்டனையளித்த முதல் சம்பவம்!

தவறையுணர்ந்து மன்னிப்புக் கோர முடிவெடுத்த PMGGயின் அரசியல் முன்மாதிரி!!-

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர்களுள் ஒருவரான ஏ.சீ.எம். அஸாம் என்பவரை மட்டக்களப்பில் வைத்து ஆயுததாரிகள் கடத்திச் சென்று 4 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரித்த பின்னர் எச்சரித்து விடப்பட்டார் என்ற செய்தி கடந்த வாரத்தில் மிகவும் பரபரப்பாக அனைவராலும் பேசப்பட்டது.

இது தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த மாதம் 29ம் திகதி அதன் அலுவலகத்தில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்த விடயங்கள் கடந்த 03ம் திகதி வெளிவந்த ‘வார உரைகல்’ பத்திரிகையிலும், மறுதினம் எமது இணையதளத்திலும் பிரசுரமாகியது. Continue reading