பிப்ரவரி, 2012 க்கான தொகுப்பு

அப்துர்றவூப் மௌலவியின் அரசியல் ஞானம் நமதூருக்கு உதவுமா? – பகுதி: 03

அப்துர் றவூப் மௌலவிக்கும், அவரது கருத் துக்களை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினர் வழங்கிய ‘ஏகத்துவக் கொள்கையில் ஊடுருவல்’ என்ற ‘பத்வா’ மார்க்கத் தீர்ப்பு காத்தான்குடியில் பல்வேறு வகையான சமய சமூகத் தாக்கங்களையும் ஏற்படுத்தியதுடன் தேசிய ரீதியிலும் குறிப்பாக அம்பாறை, கண்டி, பதுளை, கொழும்பு போன்ற மாவட்டங்களிலும் பல்வேறு பிரச்சினைகளையும் தோற்றுவித்தது. Continue reading

சூறாசபை உறுப்பினர் அஸாம் சகல பதவிகளில் இருந்தும் நீக்கம்! நகரசபைத் தரப்பிடம் வருத்தம் தெரிவிக்கவும், விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும் PMGG தீர்மானம்!!

-ஆயுததாரிகளால் அவர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட புகாரின் எதிரொலி-

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரான புதிய காத்தான்குடி கர்பலா வீதியைச் சேர்ந்த ஏ.ஸீ.எம். அஸாம் கடந்த மாதம் 27ம் திகதி ஆயுததாரிகளால் மட்டக்களப்பில் வைத்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தமது அமைப்பு கடந்த ஒரு வார காலமாக மேற்கொண்டு வந்த உள்ளக விசாரணைகளில் இருந்து அவரது முறைப்பாட்டில் திடமான நம்பகத்தன்மை இல்லாமை அறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரை தமது இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பதவியிலிருந்தும், ஏனைய சகல பொறுப்புக்களிலிருந்தும், எதிர்காலத்திலும் அவரை இவ்வியக்கத்தில் ஒரு அங்கத்தவராக உள்வாங்குவதிலிருந்தும் நீக்ககுவதாக தீமானிக்கப்பட்டிருப்பதாக இன்று பி.ப. 01:00 மணிக்கு அவ்வமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Continue reading

அண்ணல் நபி பெருமானின் பெயரால் புதிய காத்தான்குடி ஹைறாத் பள்ளியிலும், இப்றாஹீமிய்யா மத்ரஸாவிலும் கந்தூரி வைபவங்கள்

-நேற்றும் இன்றும் அதிவிமரிசையாக நடைபெற்றன-

நபி மணி ஸல்லழ்ழாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீலாதை முன்னிட்டு புதிய காத்தான்குடியிலுள்ள ஹைறாத் பள்ளிவாசலிலும், அல் மத்ரஸதுல் இப்றாஹீமிய்யாவிலும் நேற்றும், இன்றும் மௌலித் பாரயண நிகழ்வுகள் நடைபெற்றதுடன் தபர்ருக் அன்னதான விநியோகங்களும் இடம்பெற்றன.

நேற்று 04ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் புதிய காத்தான்குடி நூறானியா மாவத்தையில் அமைந்துள்ள அல்மத்ரஸதுல் இப்றாஹீமிய்யா குர்ஆன் மத்ரஸாவில் கடந்த 12 தினங்களாக இடம்பெற்றுவந்த சுப்ஹான மௌலித் பாரயண நிகழ்வு அல்குல்லிய்யதுர் றப்பானிய்யா அரபுக்கலாபீடத்தின் விரிவுரையாளர் மௌலவி எம்.எம். அப்துல் மஜீத் றப்பானி அவர்களின் தலைமையிலான உலமாப் பெருமக்களால் தமாம் செய்யப்பட்டது. Continue reading

வளமான இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 64வது தேசிய சுதந்திர தினத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு அறகூவல்

தூர நோக்கற்ற இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சுயநலன்கள் மிகைத்த செயற்பாடுகளினால் எமது முன்னோர் ஆற்றிய இந்நாட்டின் சுதந்திரத்திற்கான காத்திரமான பங்களிப்புகள் இன்று மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.

தேசியத்தையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி இந்நாட்டு மக்களின் ஐக்கியத்தையும், சகவாழ்வையும் முன்னெடுக்க வேண்டிய எமது முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அரசியல் தலைமைகள் பிரிவினைக் கோஷங்களையே இன்னமும் முன்வைத்து அரசியல் தீர்வைக் கோரி வருவதால் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள்மீது திட்டமிட்டு தீவிரவாத சாயம் பூசப்படுகின்ற அபாயகரமான சூழ்நிலை இன்று தோன்றியுள்ளது.

இவ்வாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 64வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்  ‘வளமான இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம’ எனும் தொனிப் பொருளில் இன்று (04.02.2012) சனிக்கிழமை காலை காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் மக்கள் சந்திப்பு அரங்கில் இடம்பெற்றபோதே அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினர் ஜனாப். எஸ்.எம்.எம். பஷீர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு இன்று காலை 08:30 மணிக்கு ஆரம்பமாகியது.

பிரதேசத்தின் பிரமுகர்கள், உலமாக்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வை காத்தான்குடி நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தேசியக் கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார். Continue reading

PMGG சூறா சபை உறுப்பினர் அஸாம் துப்பாக்கிதாரியால் கடத்தப்பட்டார்

-காத்தான்குடி நகரசபைத் தரப்பினருக்கு தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகம்-

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் ஏ.சீ.எம். அஸாம் கடந்த மாதம் 27ம் திகதி மாலை மட்டக்களப்பில் வைத்து ஆயுததாரி ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டார்.

கடந்த மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவ்வியக்கத்தின் சூறா சபை உறுப்பினரும், காத்தான்குடி நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் இத்தகவலைத் தெரி வித்தார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: Continue reading

இந்தியாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமையவுள்ளது

-அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் கௌரவ அதிதியாகப் பங்கேற்பு-

இந்தியாவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த மாதம் 30ம் திகதி இடம்பெற்றது.

கேரள மாநிலத்திலுள்ள கலிகட் (கோழிக்கோடு) மாவட்டத்தில் இந்தப் பள்ளிவாசல் அமையவுள்ளது.

250,000 சதுர அடி நிலப்பரப்பில் 400 மில்லியன் இந்தி ரூபா செலவில் இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படும். Continue reading

‘எமது ஷெய்கு நாயகம் அவர்கள் கைகொடுத்திராவிட்டால் அப்துர்றவூப் மௌலவி அன்றே கொல்லப்பட்டிருப்பார்!’

-‘லஜ்னதுல் காதிரிய்யா வர்ரிபாயிய்யா தரீக்கா’ சபை யின் தலைமையகப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம். மௌசூப் ஆசிரியர்-

‘காத்தான்குடியில் தரீக்கா நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படும்போது இன்று அப்துர் றவூப் மௌலவி அவர்கள் தமது கண்டனத்தைக்கூடத் தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கிறார்.”

“அவரால் காத்தான்குடியில் மார்க்கப் பிரச்சினைகள் எழுந்த கால கட்டத்தில் எமது ஷெய்கு நாயகம் அவர்கள் துணிந்து அவருக்கு கை கொடுக்காமல் மௌனம் சாதித்துக்கொண்டு இருந்திருந்தால் அன்றே அவரை காத்தான்குடி மக்கள் கொலை செய்திருப்பார்கள்.’

இவ்வாறு ‘லஜ்னதுல் காதிரிய்யா வர்ரிபாயிய்யா தரீக்கா’ சபை யின் தலைமையகப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம். மௌசூப் ஆசிரியர் ‘வார உரைகல்’லுக்குத் தெரிவித்தார். Continue reading

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, தவிசாளர் அஸ்பர் தரப்பிலிருந்து சதி நடவடிக்கைகள் ஏற்படலாம் என பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தற்காப்பு முறைப்பாடு

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் ஆகியோரின் தரப்பிலிருந்து தனக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தான் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்து காத் தான்குடி நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தற்காப்பு முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். Continue reading

காத்தான்குடியிலும் 64வது தேசிய சுதந்திர தின விழா நிகழ்வுகள்

இலங்கையின் 64வது தேசிய சுதந்திர தின விழா நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மேற்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 04ம் திகதி சனிக்கிழமை காலை 08:00 மணிக்கு இந்நிகழ்வு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள PMGG மக்கள் அரங்கில் நடைபெறும் என அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். Continue reading

பொலிஸ் நிலையத்தில் வைத்து பிரதம ஆசிரியரை எச்சரித்த மாஹிர் ஹாஜியார் இறுதியில் மன்னிப்புக் கோரினார்!

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அல் ஹாஜ் எம்.எஸ்.எஸ். சுபைர் அவர்களின் காத்தான்குடி பிரதேசத்திற்கான இணைப்புச் செய லாளர் ஏ.எம்.எம். மாஹிர் ஹாஜியார் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரை பொலிசாரின் முன்பாக பொலிஸ் நிலையத்தில் வைத்தே பலத்த சப்தத்துடன் அச்சுறுத்தி பகிரங்கமாக எச்சரித்ததுடன், பின்னர் அவ்வாறு தான் முறை கேடாக நடந்து கொண்டதற்காக பொலிஸ் நிலையத்தில் வைத்து அதே பொலீசார் முன்னிலையில் பிரதம ஆசிரியரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 22ம், 24ம் திகதிகளில் நடைபெற்ற இச்சுவாரஸ் யமான சம்பவங்கள் பற்றிய முழு விவரமாவது: Continue reading