முறைகேடாக வழங்கப்பட்ட பள்ளிவாசல் பணத்தின் மூலம் பாடசாலை அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளலாமா?

Metththaippalliமெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்குரிய பணம் 2 ½ இலட்சம் ரூபாவை, கோட்டக் கல்வி அதிகாரியினதும், வலயக் கல்விப் பணிப்பாளரினதும் அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொண்டு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள அவ்வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ. கபூருக்கு அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மெத்தைப்பள்ளிவாசல் தலைவர் மர்சூக் அகமட் லெப்பை மற்றும் அப்பள்ளிவாசல் செயலாளர் எம்.ஏ. றபீக் ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக அப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் முன் வைத்திருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலமே, இப்பள்ளிவாசல் பணம் 2½ இலட்சம் ரூபா முறைகேடான முறையில் இவ்வித்தியாலய அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட விடயம் அம்பலமாகியது.

இதனையடுத்தே பள்ளிவாசல் ஜமாஅத்தார்களும், நலன் விரும்பிகளும் மேற்கண்ட கேள்விகளை ‘வார உரைகல்’ ஊடாக எழுப்பியுள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதியை இப்பள்ளி வாசல் நிர்வாக சபையினர் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கும் ஏற்கனவே கையளித்திருந்தனர்.

அப்பிரேரணை சம்மேளனத்தின் வாராந்த நிர்வாக சபைக் கூட்டத்திலும் வாசித்துக்காட்டப்பட்டு சபை யோரின் கருத்துக்களும் அங்கு பரிமாறப்பட்டன.

எனினும் சம்மேளனத்தின் கல்விக் குழுவில் அங்கத்துவம் வகிப்பவர் களோ அல்லது சம்மேளனத்தின் நிர்வாக சபையில் அங்கத் துவம் வகிக்கும் கல்வித்துறை சார்ந்தவர்களோ இந்த முறை கேடான பணப் பரிமாற்றம் குறித்து வாய் திறக்கவில்லை.

‘வார உரைகல்’ பத்திரிகையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான செய்திகளும், அதில் இடம்பெற்ற 11 குற்றச்சாட்டுக்களும் விவரமாகப் பிரசுரிக்கப்பட்டிருப்பதைக் கண்ணுற்றே இவ்வாறு பெருந்தொகையான பணம் முன்னாள் தலைவரான மர்சூக் அகமட் லெப்பையினாலும், முன்னாள் செயலாளரான ஏ.எம். றபீக் ஆசிரியரினாலும் முறைகேடான முறையில் மெத்தைப்பள்ளிவாசல் அதிபர் எஸ்.எல்.ஏ. கபூர் B.com என்பவருக்கு வழங்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.

இதுகுறித்து கேள்வி எழுப்பும் மேற்படி பள்ளிவாசல் ஜமாஅத் தார்கள், இவ்வாறு நம்பிக்கையாளர்களுக்குத் தெரியாமல் முன்னாள் தலைவர் மர்சூக் அகமட்லெப்பையும், செயலாளர் றபீக் ஆசிரியரும் பள்ளிவாசல் பணத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பது குறித்து தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

மேலும், மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ. கபூர், இவர்களால் வழங்கப்பட்ட இப்பணத்தை கோட்டக்கல்வி அதிகாரியினதும், வலயக் கல்விப் பணிப்பாளரினதும் அங்கீ காரமின்றி எவ்வாறு தனிப்பட்ட முறையில் பெற்று அரசாங்கப் பாடசாலையொன்றில் அவரது இஷ்டத்திற்கேற்ப அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடியும்? எனவும் கேட்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரிடம் ‘வார உரைகல்’ தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்வாறு ஒரு அதிபர் தன்னிச்சையான முறையில் செயற்படுவது முற்றிலும் தவறான நடவடிக்கையே ஆகும் எனக் கூறினார்.

அரசாங்கப் பாட்சாலைகளில் ஏதாயினும் ஒரு அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது அது தொடர்பான அபிவிருத்தித் திட்ட வரைவுடனும், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்துடனும் கோட்டக்கல்வி அதிகாரிக்குத் தெரியப்படுத்தி அவரது சிபார்சைப் பெற்று வலயக் கல்விப் பணிப்பாளரின் அங்கீகாரத்துடன்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவ்வாறெல்லாம் செயற்படாமல் பள்ளிவாசலாயினும் சரி, தனிப்பட்ட கொடையாளர்களாயினும் சரி பாடசாலையின் நலன்கருதி இவ்வாறு பணத்தையோ அல்லது பொருளையோ வழங்க முன் வரும்போது அதிபர் தன்னிச்சையாக அவற்றைப் பெற்று அவரது சுய விருப்பத்திற்கமைய செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனடிப்படையில் மெத்தைப்பள்ளிவாசல் முன்னாள் தலை வரும், செயலாளரும் பள்ளிவாசலுக்குரிய பணம் 2½ இலட்சம் ரூபாவை நம்பிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இப்பாட சாலை அதிபரிடம் வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு புறமிருக்க, இவ்வாறு வழங்கிய பெருந்தொகைப் பணத்தை இவ்வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ. கபூர் மேற்குறிப்பிட்ட கல்வித் தணைக்களத்தின் நடைமுறைகள் எதனையும் பின் பற்றாமல் தன்னிச்சையாகப் பெற்றுக் கொண்டு அவர் விரும் பிய மாதிரியெல்லாம் பாடசாலையில் அபிவிருத்தி நடவடிக் கைகளை மேற்கொண்டிருப்பது பாரிய குற்றமாகும் என்றே ‘வார உரைகல்’ கருதுகின்றது.

இவ்வித்தியாலயத்தின் அதிபர், ஏற்கனவே காத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்தபோது அவரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விதமான மோசடிகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் குறித்தும் ‘வார உரைகல்’ அம்பலப்படுத்தியதையடுத்து, சங்கத்தின் பொதுச்சபை அவசர மாகக் கூட்டப்பட்டதும், அதன்போது இவர்மீதான குற்றச்சாட் டுக்கள் விவாதிக்கப்பட்டபோது தனது தலைவர் பதவியை இவர் ராஜினாமாச் செய்துவிட்டு சபையிலிருந்து வெளியேறிய தும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

ப.நோ.கூ. சங்கத்தில் தலைவராக இருந்தபோது தன்னிச்சை யாகச் செயற்பட்டு அச்சங்கத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியதைப் போன்றுதான் தற்போதும் இவர் இப்பாட சாலையின் அதிபராக இருந்து கொண்டு தன்னிச்சையாகச் செயற்படுகின்றாரா? என்றும் ‘வார உரைகல்’ வினவுகின்றது.

MSM.-Subairஇது குறித்து காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் முக்கியஸ்தராக இருக்கும் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எம்.எம். சுபைர் கூட அக்கறை செலுத்தாமல் இருந்து வருவதன் மர்மம் என்ன?

அவருக்கும் மோசடியான முறையில் இடம்பெற்றுள்ள இப்பணப் பரிமாற்றத்தில் ஏதும் பங்குகள், பங்களிப்புக்கள் இருக்குமோ? என்ற சந்தேகமும் இப்போது பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது.

ZDE Ahamed Lebbeஇந்த முறைகேடான பணப்பரிமாற்றம் தொடர்பாக மட்டக் களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட்லெப்பை அவர்கள் எத்தகைய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வார் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்!

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக