அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட்டின் வெளிநாட்டுப் பெண்களுடனான கும்மாளச் செய்தியையும், படங்களையும் பிரசுரித்த ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புகார்!

Vaarauraikal (277) -1அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட், வெளிநாட்டுப் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததாக  ‘புழுதி’ இணையதளத்தில் வெளியான செய்தியையும், படங்களையும் நேற்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியான ‘வார உரைகல்’ பத்திரிகையின் 277வது பதிவில் பிரசுரித்தமை தொடர்பில்,  அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஏறாவூரைச் சேர்ந்த செயலாளர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக இன்று மாலை 03:45 மணியளவில் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் இல்லத்திற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
Vaarauraikal (277) -2இம்முறைப்பாடு தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காக நாளை 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வந்து சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ரணசிங்கவைச் சந்திக்குமாறும் பொலிசார் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரிடம் நேரில் கேட்டுக் கொண்டனர்.

எனினும் இது சம்பந்தமாக பொலீசார் எந்தவிதமான எழுத்து மூலமான கட்டளைகளையும் பிரதம ஆசிரியரிடம் கையளிக்கவில்லை.

இதேவேளை, நேற்றிரவு (18.10.2013) காத்தான்குடி குட்சின் சந்தியில் நடைபெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த பொலிஸ் குழுவினருக்குத் தலைமை தாங்கிய இன்ஸ்பெக்டர் ரணசிங்க, ‘வார உரைகல்’ பத்திரிகையை அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த பிரதம ஆசிரியரை அணுகி அவ்விடத்தில் பத்திரிகையை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

அப்பத்திரிகையில் அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் பெண்களுடன் கும்மாளமாக இருக்கும் புகைப்படங்கள் பிரசுரமாகியுள்ளதால் அதனைப் பார்வையிடும் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் ஏதும் பிரச்சினைகளை அவ்விடத்தில் ஏற்படுத்தினால் நாம் இப்பொதுக் கூட்டத்தை நிறுத்த வேண்டி ஏற்படும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

அவரது நியாயமான இந்த அறிவுறுத்தலை ஏற்றுக் கொண்ட பிரதம ஆசிரியர், அதன் பின்னர் அவ்விடத்தில் பத்திரிகையை விற்பனை செய்யாது தவிர்த்துக் கொண்டார்.

எனினும் இன்று காலை வழமைபோல் வாசகர்களுக்கு இவ்வாரப் பத்திரிகையை பிரதம ஆசிரியர் விற்பனை செய்தார்.

அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட் வெளிநாட்டுப் பெண்களுடன் உல்லாசமாக சல்லபம் அனுபவிக்கும் இச்செய்தியையும், புகைப்படங்களையும் ‘வார உரைகல்’ பத்திரிகை மாத்திரமே இலங்கையில் பகிரங்கப்படுத்தி இருந்தது.

மாத்திரமன்றி காத்தான்குடியை மையப்படுத்தியதாக இயங்கிவரும் (புழுதி மற்றும் வார உரைகல் இணையதளங்கள் தவிர்ந்த) பல்வேறு இணையதளங்களும் இந்தச் செய்திகளையும், புகைப்படங்களையும் வெளியிடாது இருட்டடிப்புச் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • Fashlin Perera
    • ஒக்ரோபர் 31st, 2013

    அச்சமிழலி அச்சமில்லை ச்சமேன்பதில்லையே…..தொடருங்கள் புவி….

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக