ஜூன் 23rd, 2014 க்கான தொகுப்பு

பாதுகாப்புச் செயலாளருடன் முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

goஅளுத்கம தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியாக நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள்என்பன குறித்து இன்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் சமூகத்தின் சில பிரதிநிதிகளுக்குமிடையில் கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

Continue reading

பொதுபல சேனாவை மூன்று சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்

bபொதுபல சேனாவைச் சேர்ந்தவர்களை மூன்று சட்டங்கங்களின் கீழ் கைது செய்து தண்டனைக்கு உட்படுத்த முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தர்கா நகரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 40க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் பாரிய பனிப்பாறை ஒன்றின் சிதைவுகளே தவிர, இந்த சம்பத்தின் சூத்திரதாரிகள் இல்லை.

Continue reading

பொதுபல சேனா கண்டியில் நாளை மனவுறுதி பூஜை: பொலிஸார் எதிர்ப்பு! கோத்தபாய ஆதரவு?!

bftgotபொதுபல சேனா அமைப்பு, கண்டி நாத ஆலயத்தில் இனவாதம் மற்றும் மத வாதத்தை தூண்டும் கூட்டம் ஒன்றை மனவுறுதி பூஜை என்ற பெயரில் நாளை நடத்தத் தயாராகி வருதுடன்; அதற்கு பொலிஸார் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும்  நிலையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆதரவு வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue reading

குருக்கள்மடம் பிரதேசத்தில் கடத்தப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழிகளை ஜூலை மாதம் 01ம் திகதி தோண்டுமாறு நீதிவான் உத்தரவு!

judRauff-A.-Majeed-2மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குருக்கள்மடம் – அம்பிலாந்துறை பிரதேசங்களில் வைத்து 1990-ஆம் ஆண்டில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் புதைகுழிகளை எதிர்வரும் ஜூலை மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை தோண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜனாப் எம். றியாழ் அவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முகைதீன் மெத்தைப்பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவருமான அல்ஹாஜ். ஏ.எம்.எம். றவூப் J.P. ‘வார உரைகல்’லிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

Continue reading

மனக் கஸ்டத்துடன் தான் அரசாங்கத்தில் இருக்கிறோம்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

MLAM.-Hizbullah-150x150நாங்கள் மிக வெட்கத்துடனும் மனக் கஷ்டத்துடனும்தான் இந்த அரசாங்கத்திலே ஒட்டிக் கொண்டிருக்கின்றோம் என பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றும்போது…

Continue reading

இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள்: முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னமும் மௌனம் காப்பது ஏன்??

Interpol“இலங்கையில் கொழும்பு, காத்தான்குடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து தலிபான் தீவிரவாதிகள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்” என சர்வதேசப் பொலீசார் இலங்கையின் புலனாய்வுப் பிரிவினருக்கு எச்சரிக்கை அறிப்புச் செய்து ஒரு வாரம் கடந்து விட்டது.

Continue reading