முஸ்லிம்கள் மீதான அளுத்கம தாக்குதலைக் கண்டித்து யாழ் மாநகர சபையிலும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

jafஅளுத்கமவில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களைக் கண்டித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள யாழ் மாநகர சபை, இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதன் போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பினர் ஆரப்பாட்டம் செய்தமையானது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல என்றும், கடந்த காலங்களில் இல்லாத அக்கறை இப்ப மட்டும் எங்கிருந்து வந்தது? என்றும் உலகத்திற்கு காட்டுவதற்காக கூட்டமைப்பினர் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்றும் சபையில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

jaffnamunicipal

ஆயினும் குறித்த உறுப்பினரின் கருத்தை ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கடுமையாக எதிர்த்ததுடன்; இரண்டு இனங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒற்றுமையாகவே செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதனையடுத்த தாக்குதல் தொடர்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஸ்ட ஈடு பெற்றுக் கொடுக்க வெண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக